Breaking News

எப்போதாவது பிஸ்கட் சாப்பிடலாம்..!

நிர்வாகி
0




 எப்போதாவது பிஸ்கட் சாப்பிடலாம். 
பிஸ்கட்டையே எப்போதும் சாப்பிட்டுக் கொண்டிருப்பது தவறு.

கடையில் மளிகை வாங்கிக் கொண்டு இருக்கும்போது, ஒருவர், marigold பிஸ்கட் ஒரு பெரிய case ஆக வாங்கினார். உடன் குழந்தைகள் இருந்தனர். நிச்சயம் அவர்களுக்காகதான் வாங்கி இருப்பார் என நினைக்கிறேன். 

காரணம், முன்பே ஒருமுறை என்னுடைய தோழி ஒருவர் tiger biscuit ஒரு முழு case ஐ வாங்குவதைப பார்த்து எதற்கு இவ்வளவு என்று கேட்டு இருக்கிறேன். 

"பையன் தினமும் ஒரு பாக்கெட் சாப்பிடுவான். அதனால்தான் மொத்தமாக வாங்கி வைத்துவிடுவேன்" என்று கூறியது நினைவிற்கு வந்தது.

10 ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டில் 10 முதல் 12 பிஸ்கெட்டுகள் இருக்கலாம். அதன் எடை 60-70 கிராம் இருக்கும். 100 கிராம் பிஸ்கெட்டில் உள்ள சத்துக்களின் பட்டியலில் கலோரி, புரதம், கொழுப்பு போன்றவற்றை சிறிதளவே குறிப்பிட்டு இருப்பார்கள். 

ஆனால்,  100 கிராம் பிஸ்கெட்டுக்கு 319 மில்லிகிராம் சோடியம் மட்டுமே இருக்கிறது. இவர்களாக சேர்த்த கூடுதல் சர்க்கரை 20 கிராம். அதுவும் அனைத்தும் ரீஃபைண்ட் செய்யப் பட்டவை. இது மட்டும் அல்லாது, செயற்கை மணமூட்டிகள், சுவையூட்டிகள், நிறமூட்டிகள் என்று அத்தனையும் கூடுதலாகத்தான் இருக்கும். 

பிஸ்கெட்டின் மேல் உறையில் இருக்கும்  இந்த செய்திகளை நிச்சயம் யாரும் படித்துவிட்டு சாப்பிடுவது கிடையாது. 

இவ்வாறு இருக்கும் பிஸ்கெட்டை குழந்தைகளுக்குத் தொடர்ச்சியாக அதிகளவில் கொடுத்துக் கொண்டிருந்தால் என்னவாகும்.??

அவர்களின் வயதுக்குக் கிடைக்க வேண்டிய சர்க்கரை, உப்பு, வேதிப் பொருட்கள் அனைத்தும் மிக அதிகமாகத் தான் உடலுக்குள் செல்லும். ஒன்று.. உடல் எடை அதிகரிக்கும் அல்லது குறையும். கவனமின்மை, மந்தத் தன்மை, பசியின்மை என்று ஒவ்வொன்றாக 
வரத்துவங்கும். 

ஆக...பெற்றோர்களே நீங்களே உங்கள் குழந்தையின் உடல் நலனைக் கெடுக்கும் முதல் நபர் ஆகிவிடாதீர்கள். 

ஆக....எத்தனை வகையான பிஸ்கெட்டுகள் வேண்டுமானாலும் சாப்பிட்டு மகிழ்ச்சி கொள்ளுங்கள். ஆனால் அது அளவுடன் இருக்கட்டும். தினமும் பிஸ்கெட் சாப்பிடும் பழக்கத்தை விட முடியாது என்றாலும் கூட, இரண்டுடன் நிறுத்திக் கொள்ளப் பழகுங்கள். 

🧇 வண்டார்குழலி ராஜசேகர் 🧇 

Tags: பயனுள்ள தகவல்

Share this