லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக் குழு கூட்டம்
அல்லாஹ்வின் பேரருளால் 17-9-2022 சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர், மவ்லானா மவ்லவி, ஹாஃபிழ், ஷைகுல் ஜாமிஆ A. நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது
தீர்மானங்கள்:
இளைஞர்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாட்டை கண்டறிந்து அதிலிருந்து நமது இளைஞர்களை பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்வது
பள்ளிவாசல் முத்தவல்லிகள் நிர்வாகிகள் இமாம்கள் மற்றும் ஆலிம்கள் ஒன்றிணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததுவது
அதன் அடிப்படையில் லால்பேட்டையில் இரண்டு அல்லது மூன்று மஸ்ஜித்களை ஒன்றிணைத்து ஒரு பகுதியாக ஆக்கி லால்பேட்டை முழுவதும் பல பகுதிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்ததுவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இக்கூட்டத்தில் ஏராளமான ஆலிம் பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.
Tags: லால்பேட்டை