Breaking News

கடலூர் தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0

 


கடலூர் தெற்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் லால்பேட்டை நூர் மஹாலில் 06/11/2022 ஞாயிறன்று மாவட்டத் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஜகரிய்யா தலைமையில், மண்டல பொருப்பாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி முன்னிலையில் எழுச்சியோடு நடைபெற்றது.


துவக்கமாக மெளலவி முஹம்மது தெளஃபீக் மன்பஈ கிராஅத் ஓத் ஓதினார்.


மாவட்டச் செயலாளர் எ.சுக்கூர் அவர்களின் அறிமுக உரை, சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற கடலூர் வடக்கு மாவட்டத் தலைவர் ராஜா ரஹீமுல்லாஹ், செயலாளர் முஹம்மது இஸ்மாயில்,விழுப்புரம் மாவட்ட பொருளாளர் அப்துல் கனி, துணைச் செயலாளர் சுல்தான் மொய்தீன் தலைமை நிலைய போச்சாளர் சல்மான் பாரிஸ் ஆகியோரது கருத்துரைகளோடு, மாவட்ட நிர்வாகிகள் தீர்மானங்களை வாசித்தனர்.


இன்ஷா அல்லாஹ் மார்ச் 10, 2023-ல் நடைபெற இருக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழா மாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு பல்வேறு முடிவுகள் தீர்மான வடிவில் நிறைவேற்றப்பட்டது.


கூட்டத்தில் லால்பேட்டை, மங்கலம்பேட்டை, ஆயங்குடி, கொள்ளுமேடு, மானியம் ஆடூர், என்ளேரி, காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், விருத்தாசலம், பின்னத்தூர் உள்ளிட்ட பிறைமரி நிர்வாகிகள், MSF, MYL,STU நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட பொருளாளர் ஷஹாபுதீன் நன்றி கூறினார்.

லால்பேட்டை நகர துணைத் தலைவர் மெளலவி முஹம்மது அய்யூப் மன்பஈ துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.


தாய்ச் சபை தலைமை அறிவிக்கும் அனைத்து செயல் திட்டங்களையும் முனைப்போடு செயல்படுத்தும் முதன்மையான மாவட்டமாக கடலூர் மாவட்டம் என்றும் திகழும் என்பதற்கு நேற்றைய செயற்குழு சாட்சியமளித்தது. அல்ஹம்துலில்லாஹ்!




Tags: லால்பேட்டை

Share this