நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் ஆலோசனை கூட்டம்
அல்லாஹ்வின் பேரருளால் இன்று 14-6-2023 புதன் கிழமை காலை 11 மணியளவில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரியில் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் சபையின் தலைவர் மவ்லானா, மவ்லவி ஷைகுல் ஜாமிஆ
A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் அனைத்து பள்ளிவாசல் இமாம்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
ஈதுல் அள்ஹா (ஹஜ் பெருநாள்) இன்னும் சில நாட்களில் வர இருக்கும் நிலையில் குர்பானி சம்மந்தமான சிறப்புகள் அதன் சட்டங்கள் பற்றியும்
பொதுமக்களிடத்தில் குர்பானி சம்மந்தமாக பரவலாக ஏற்படும் சந்தேகங்களுக்கு விளக்கம் தரும் வகையில் ஜும்ஆ உரை நிகழ்த்த வேண்டும் என்று இமாம்களிடத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இக்கூட்டத்தில் குர்பானி சம்மந்தமான பல சந்தேகங்களுக்கு சபையின் தலைவர் ஷைகுல் ஜாமிஆ
A நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தெளிவாக விளக்கமளித்தார்கள்
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே
Tags: சமுதாய செய்திகள் லால்பேட்டை