Breaking News

லால்பேட்டை தெற்கு தோப்பு நூருல் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் நடத்திய உத்தம நபியின் உதய தின விழா...!

நிர்வாகி
0

 லால்பேட்டை தெற்கு தோப்பு நூருல் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர்கள்  இணைந்து நடத்திய உத்தம நபியின்  உதய தின விழா 29/11/2023 ஞாயிற்றுக் கிழமை மாலை நடைபெற்றது.


ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வரும்,கடலூர் மாவட்ட அரசு காஜியுமான மெளலவி ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமை வகித்தார். நூருல் முபாரக் மஸ்ஜித் முத்தவல்லி டி.ஹெச்.தமீமுல் அன்சாரி, துணை முத்தவல்லி கே.சாதிக் பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நூருல் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மெளலவி ஹாபிழ் எஸ்.எம்.ஹாஜா முஹையத்தீன் மன்பஈ கிராஅத் ஓதினார்.


மெளலவி எம்.ஹெச்.முஹம்மது சமீர் மன்பஈ வரவேற்புரை ஆற்றினார்.

ஜாமிஆ மன்பவுல் அன்வார் துணை முதல்வர் மௌலவி எஸ்.ஏ.சைபுல்லாஹ் மன்பஈ ஹஜ்ரத், மெளல்வி ஏ.எம்.பக்கீர் முஹம்மது மன்பஈ, மெளலவி ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி, மெளலவி முஹம்மது அன்வர் மன்பஈ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


கோவை தாருல் இஸ்லாம் ஹனஃபி மஸ்ஜித் தலைமை இமாம் மெளலவி ஏ.அப்துல் மாலிக் சிராஜி சிறப்புரையாற்றினார்.


12 தினங்கள் தொடர் பயான் செய்த ஜாமிஆவின் பேராசிரியர் மெளலவி வீ.ஆர். அப்துஸ் ஸமத் ஹஜ்ரத் நிறைவுப் பேருரையாற்றினார்.


தக்வா மஸ்ஜித் இமாம் மெளலவி ஏ.எம்.பக்கீர் முஹம்மது மன்பஈ தொகுத்து வழங்க,மெளலவி ஏ.எம்.முஹம்மது ஹஸன் மன்பஈ நன்றி கூறினார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை 

தெற்கு தோப்பு நூருல் முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் ஜமாஅத்தார்கள் மற்றும் இளைஞர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.







Tags: லால்பேட்டை

Share this