Breaking News

திருவண்ணாமலையில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மண்டல பயிலரங்கம் !

நிர்வாகி
0

 

திருவண்ணாமலை தெற்கு, திருவண்ணாமலை வடக்கு, விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் தெற்கு, கடலூர் வடக்கு, அரியலூர், திருப்பத்தூர், வேலூர் ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் திருவண்ணாமலை மண்டல பயிலரங்கம் 14/01/2024 ஞாயிற்று கிழமை அன்று காலை முதல் மாலை வரை திருவண்ணாமலை தன்ராம்பட்டு ரோடு மாதவி பன்னீர்செல்வம் மஹாலில் நடைபெற்றது.


மாநில துணை தலைவர் இ.முஹம்மது அலி தலைமை வகித்தார். 


மாநில துணைச் செயலாளர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி  வரவேற்புரையாற்றினார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் நிறைவு பேருரை வழங்கினார்.


மாண்புமிகு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, மாண்புமிகு தமிழ்நாடு துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் Ex.M.L.A., மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், மாநில துணை தலைவரும், இராமநாதபுரம் தொகுதி மக்களவை உறுப்பினருமான கே.நவாஸ் கனி M.P., மாநில செயலாளர் ஹெச்.அப்துல் பாசித் Ex.M.L.A., மகளிரணி தேசிய தலைவி ஏ.எஸ்.ஃபாத்திமா முஸப்பர் உள்ளிட்டோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.


திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.நவாப் ஜான் நன்றி கூறினார்.


மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்ற பயிலரங்கில் மண்டலங்களில் உள்ள மாவட்டத்தை சார்ந்த மாநில , மாவட்ட, நகர முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணிகளின் பொறுப்பாளர்கள் திரளாக பங்கேற்றனர்.














Tags: செய்திகள்

Share this