Breaking News

லால்பேட்டை துபாய் ஜமாத் சிறப்பு மலர் வெளியீட்டு விழா , இஃப்தார் நிகழ்ச்சி

நிர்வாகி
0

 



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..

லால்பேட்டை துபாய் ஜமாத் 36ஆம் ஆண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழா மற்றும் 23ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி சீறும்சிறப்புமாக நேற்று மார்ச் 24ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் துபாய் பணியாஸ் மெட்ரோ அருகிலுள்ள 'லேண்ட்மார்க் ஹோட்டலில்' நடைபெற்றது.


ஹாஃபிழ் O.Y அமானுல்லாஹ் அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். ஜமாத்தின் துணைத்தலைவர் மௌலவி A.R ரியாஜூல்லாஹ் மன்பயீ  அவர்கள் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார். ஜமாத்தின் செயலாளர் Z.பயாஜ் அஹமத் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

ஜமாத்தின் தலைவர் ஹாஜி M.A ஆசிக் அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமையேற்று ஜமாத்தின் செயல்பாடுகள் குறித்து துவக்கவுரையற்றினார். 'முஹிப்புல் உலமா' முஹம்மது மஃரூஃப் காகா  8 என்ற  தலைப்பில் விளக்கவுரையாற்றினார். 


ஜமாத்தின் தகவல் தொடர்பாளர் S.H ஹாஜா மைதீன் அவர்கள் சிறப்பு மலர் குறித்து அறிமுவுரை வழங்கினார். ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் ஷைகுல் ஜாமிஆ A. நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் சிறப்பு மலரை வெளியீட்டார்கள். 


அதன் முதல் பிரதியை துபாய் ஈமான் கலாச்சார மையம் தலைவர் P.S.M.ஹபிபுல்லாஹ் அவர்கள் பெற்று வாழ்த்துரை வழங்கினார்.


இரண்டாம் பிரதியை லால்பேட்டை அல்ஜமா பைத்துல்மால் தலைவர் அல்ஹாஜ் முஹம்மது ஆரிப் அவர்கள் வெளியிட 'எம்பவுள் ஹைராத்' மவுலவி ஜாபர் அலி மன்பஈ ஹஜ்ரத் அவர்கள் பெற்று வாழ்த்துரை வழங்கினார். 


மூன்றாம் பிரதியை ஜமாத்தின் மூத்த நிர்வாகி M.T அஸ்ரப் அலி அவர்கள் மற்றும் பொருளாலர் A.R.ரபியுல் அஹமது அவர்கள் வெளியிட அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் A. குத்தாலாம் லியாகத் அலி அவர்கள் பெற்று வாழ்த்துரை வழங்கினார்.


அபுதாபி அய்மான் சங்கம் பொதுச்செயலாளர் A.முஹமது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள்,


Emirates for Living அமைப்பின் நிறுவனர் வேலைவாய்ப்பு ஆலோசகர் சேக் சுலைமான் அவர்கள்,


Hope தொண்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவுசர் பைக் அவர்கள்,


Green Globe தொண்டு அமைப்பின் நிறுவனர் ஜாஸ்மின் அபுபக்கர் அவர்கள்,


அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் தலைவர் V. அஹமது அவர்கள்,


மர்ஹபா சமூக நலப்பேரவை ஒருங்கிணைப்பாளர் S.A.முஹமது ரஃபி அவர்கள்,


லால்பேட்டை மருத்துவ அறக்கட்டளை தலைவர் R.S.P அப்துல் பத்தாஹ் அவர்கள்,


டாக்டர் S.M முனாஜ் அஹ்மத் அவர்கள்,


ஆகியோர்கள் சிறப்பு மலருக்கான வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.


இஃப்தார் இடைவெளிக்கு பிறகு இரண்டாம் கட்ட  நிகழ்வு ஆரம்பமானது.


சிறப்பு மலருக்கான அதீத பங்களிப்பு நல்கிய மலர் குழு தலைவர் Z.பயாஜ் அஹ்மத் BBA, மலர் குழு மக்கள் தொடர்பாளர் S.H.ஹாஜா மைதீன் B.Sc.,, மலர் குழு ஆலோசகர்கள் A.R.ரபியுல் அஹமது B.E, மற்றும் A.ரைசுல் இஸ்லாம் MCom ஆகியோர்களுக்கு "நெறியாளுகை குழு விருது" வழங்கப்பட்டது.


தாயகத்திலிருந்து லால்பேட்டை துபாய் ஜமாத்தின் சிறப்பு அழைப்பாளராக வருகைத்தந்துள்ள ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் ஷைகுல் ஜாமிஆ A. நூருல் அமீன் ஹஜ்ரத் அவர்கள் ரமலான் சிறப்பு பயான் நிகழ்த்தினார்கள். அவர்களுக்கு ஜமாத்தின் சார்பில் "நினைவுப்பரிசு" வழங்கப்பட்டது.

அதனை ஜமாத் தலைவர் ஹாஜி M.A. ஆசிக் அலி, ஜமாத் செயலாளர் Z. பயாஜ் அஹ்மத், ஜமாத் பொருளாலர் A.R. ரபியுல் அஹமது ஆகியோர் வழங்கினார்கள்.


இறுதியாக ஜமாத் பொருளாலர் A.R. ரபியுல் அஹமது அவர்கள் நன்றியுரையாற்றினார்கள்.

ஹஜ்ரத் அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

அல்ஹம்துலில்லாஹ்..!!


எங்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த லால்பேட்டை துபாய் ஜமாத், அபுதாபி லால்பேட்டை ஜமாத், மர்ஹபா சமூகநல பேரவை, அய்மான் சங்கம், ஈமான் சங்கம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், உலமாக்கள், லால்பேட்டை மண்ணின் மைந்தர்கள் என அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். 























இப்படிக்கு,

லால்பேட்டை துபாய் ஜமாத் நிர்வாகக்குழு

Tags: உலக செய்திகள் லால்பேட்டை

Share this