Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ; தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பங்கேற்பு !

நிர்வாகி
0

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி ; தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பங்கேற்பு !


04/04/2024 வியாழக் கிழமை இரவு 10:30 மணியளவில் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நகர அலுவலகத்தில் ரமலான் அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.


நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.


செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி அனைவரையும் வரவேற்றார்.


கடலூர் தெற்கு மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான், மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம்.முஹம்மது முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மாநில துணைச் செயலாளர் ஏ எஸ் அப்துல் ரஹ்மான் ரப்பானி, மாநில கௌரவ ஆலோசகர் மருத்துவர் ஏ ஆர் அப்துஸ் ஸமது, மாவட்ட துணை செயலாளர் எம்.ஜெ.மசூது அஹமது,

நகர மூத்த தலைவர் கவிஞர் ஏ முஹிப்புல்லா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.


தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் சாஹிப் ரமலான் அன்பளிப்புகளை பயனாளிகளுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார்.


நகர பொருளாளர் எம்.ஹெச். முஹிப்புல்லா நன்றி கூறினார்.


முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் - முபாரக் ஷரீப் மதரஸா புதிய கட்டடம்:


முன்னதாக ரமலான் சிறப்பு தராவீஹ்  தொழுகையை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நிறைவேற்றிய தலைவர் பேராசிரியர் அவர்கள்  சிறிது நேரம் மஸ்ஜிதில் ஜமாத்தார்கள் முன்னிலையில் உரை நிகழ்த்தினார். 

அதன்பின்னர் முபாரக் ஷரீப் மதரஸா புதிய கட்டடத்தை பார்வையிட வந்த தலைவர் பேராசிரியர் அவர்களை முத்தவல்லி கே.ஏ.முபாரக் அலி, கட்டட குழு தலைவர் மருத்துவர் ஏ ஆர் அப்துஸ் சமது, கட்டட குழு செயலாளர் ஏ.முஹம்மது தையூப் முஹிப்பி மற்றும் மஹல்லா ஜமாத்தார்கள் அனைவரும் வரவேற்றனர்.


ஆறுதல் - துஆ


சமீபத்தில் மறைந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஊழியர் திலகம் ஹாஜிமியான் முஹம்மது அவர்கள் இல்லம் சென்று அவர்களின் புதல்வர்கள் எம்.முஹம்மது முபாரக், முஹம்மது ஹுசைன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவித்து அன்னாரது மறுமை வாழ்விற்காக துஆ செய்தார்கள்.


பங்கேற்றோர்

தலைவர் பேராசிரியர் நிகழ்ச்சிகள் அனைத்திலும் ஊடகவியலாளர் திருச்சி ஷாகுல் ஹமீது, நகர  கௌரவ ஆலோசகர்கள் வி.ஏ.அப்துர் ரஹ்மான், மவ்லவி ஏ ஏ முஹம்மது மன்பஈ, துணை தலைவர்கள் எஸ்.எம்.முஹம்மது ஹாமிது, கே.எஸ்.சபியுல்லா, மவ்லவி முஹம்மது அய்யூப், மவ்லவி அமீனுல் ஹுசைன் மன்பஈ, துணை செயலாளர்கள் எம்.எஸ்.முஹம்மது சித்தீக், கே.ஏ அபுசுஹுது, எஸ் ஏ அபுசுஹுது, நஜியுல்லா, முஹம்மது பஷீர், இளைஞர் அணி மாநில அமைப்புக் குழு உறுப்பினர் ஏ.எஸ்.அஹமது, நகர இளைஞரணி தலைவர் மவ்லவி முஹம்மது ஹாமிம் பைஜி, செயலாளர் எம்.ஏ.ஹிதாயத்துல்லா, பொருளாளர் ஏ.ஆர்.சிராஜுதீன், துணை தலைவர் மவ்லானா தவ்பீக், மவ்லானா மஹபூப் அலி ரப்பானி, இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் இலியாஸ்,

அமீரக காயிதே மில்லத் பேரவை நிர்வாகிகள் ஏ சையது முஹிப்பி, எஸ் ஏ அஸ்கர் ஹுசைன், சவூதி காயிதே மில்லத் பேரவை ஜாபர் அலி, எஸ் பக்கீர் முஹம்மது, எம்.ஹெச்.முஹம்மது நாசர், ஹஜ்ஜி முஹம்மது, சாதுல்லா, எம் பக்கீர் முஹம்மது, பஜ்லுதீன், தொழிலாளர் அணி முஹம்மது ஹசன், இர்பானுல்லா, ஊடகப்பிரிவு முஹம்மது ஹாசிம், மாணவர் அணி நிர்வாகிகள் தஸ்லிம், நிஜாம், ஆமீர், ரஹீக், ராஷித், உள்ளிட்ட முஸ்லிம் லீகினர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

















Tags: லால்பேட்டை

Share this