லால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி சார்பில் மீலாது விழா நடைபெற்றது.
லால்பேட்டை ஷைகுல் மில்லத் இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி சார்பில் 17.09.2024 செவ்வாய்க்கிழமை மாலை மீலாது விழா நடைபெற்றது.
87- ஆண்டு மீலாது தொடர் சொற்பொழிவு நிறைவு நாள் நிகழ்ச்சிக்கு ஜாமிஆ மன்பவுல் அரபிக் கல்லூரி முதல்வரும், கடலூர் மாவட்ட அரசு காஜியுமான ஷைகுல் ஜாமிஆ நூருல் அமீன் ஹஜ்ரத் தலைமை வகித்தார். லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லியும், லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் தலைவருமான ஏ.எம்.எஃப்.முஹம்மது சாதிக் முன்னிலை வகித்தார்.
ஜாமிஆவின் பேராசிரியர் ஏ.ஆர்.ஸலாஹுத்தீன் மன்பஈ வரவேற்புரையாற்றிய இந்நிகழ்வில் நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி பேராசிரியர் புஹாரி மெளலானா, சென்னை மெளலவி ஜஹீருத்தீன் மன்பஈ ஏ. .எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
Tags: லால்பேட்டை