லால்பேட்டையில் நடைபெற்ற "வளரிளம் பெண்களின் உடல் நலமும் மன நலமும்" நிகழ்ச்சி..!
லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் மற்றும் முஸ்லிம் பட்டதாரிகள் கல்வி சங்கம் இணைந்து நடத்திய "வளரிளம் பெண்களின் உடல் நலமும் மன நலமும்" நிகழ்ச்சி லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி தாருத் தப்ஸீர் கலைக்கூடத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதன்மை தலைமை ஆசிரியர் ஜனாபா ஆயிஷா பேகம் தலைமை வகித்தார்.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி முதல்வரும் கடலூர் மாவட்ட அரசு காஜியுமான மௌலவி ஏ நூருல் அமீன் ஹஜ்ரத் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
பள்ளியின் பொதுகுழு உறுப்பினர் டாக்டர் முஹதஸிம்பில்லா வரவேற்புரையாற்றினார்.
லால்பேட்டை முஸ்லிம் ஜமாத் தலைவர் முஹம்மது சாதிக், செயலாளர் அமானுல்லா, லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஃபாத்திமா ஹாரிஸ், துணைத் தலைவர் அன்வர் சதாத், முஸ்லிம் பட்டதாரிகள் கல்வி சங்கத் தலைவர் தாஹிர் ஹுசைன், செயலாளர் ஆஷிகுல் அமீன், பொருளாளர் உமர் முக்தார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் பொருளாளரும்,முஸ்லிம் பட்டதாரிகள் சங்க செயற்குழு உறுப்பினருமான ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி துவக்க உரையாற்றினார்.
சிதம்பரம் அருள் நர்சிங் ஹோம் தலைமை மருத்துவர் டாக்டர் பிருந்தா, டாக்டர் பத்மினி, லால்பேட்டை ஷிஃபா மருத்துவமனை இணை இயக்குனர் டாக்டர் ஜீனத்துன்னிஸா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று உரையாற்றினர்.
சிதம்பரம் அருள் நர்சிங் ஹோம் மகப்பேறு மற்றும் பெண்கள் நல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பவித்ரா சிறப்புரையாற்றினார்.
ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகளும், பெற்றோர்களும் பங்கேற்ற நிகழ்வுகாலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடைபெற்றது.
நிகழ்வில் முஸ்லிம் பட்டதாரிகள் சங்க மூத்த உறுப்பினர்கள் ஹாஜி பக்கீர் முஹம்மது,ஹாஜி ஜாபர் அலி,கவிஞர் முஹிப்புல்லாஹ், முஹம்மது எஹ்யா, அஸ்கர் ஹுஸைன்,அப்துல் பத்தாஹ், ஷேக் முஹம்மது, ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை