Breaking News

துபாயில் ப‌ரோடா வ‌ங்கியின் 101 ஆவ‌து ஆண்டு விழா

நிர்வாகி
0
துபாய் : துபாயில் பரோடா வ‌ங்கியின் 101 ஆவ‌து ஆண்டு விழா 21.07.2009 செவ்வாய்க்கிழ‌மை ந‌டைபெற்ற‌து.இவ்விழாவில் வ‌ங்கியின் த‌லைமை செய‌ல் இய‌க்குந‌ர் அசோக் குப்தா, அமீர‌க‌ நிதித்துறை இய‌க்குந‌ர் ச‌யீத் ர‌ஷீத் அல் ய‌த்தீம், அமீர‌க‌த்துக்கான‌ இந்திய‌ தூத‌ர் த‌ல்மிஷ் அஹ்ம‌த் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பித்த‌ன‌ர்.

ப‌ரோடா வ‌ங்கியின் வ‌ணிக‌ம் அமீர‌க‌த்தில் 2010 க்குள் 20 பில்லிய‌னாக‌ அதிக‌ரிக்கும் என‌ த‌லைமை செய‌ல் இய‌க்குந‌ர் குப்தா தெரிவித்தார். க‌ட‌ந்த‌ ஆண்டை விட‌ இவ்வாண்டு வ‌ங்கியின் முத‌லீடு 5 பில்லிய‌ன் அதிக‌ரித்துள்ள‌தாக‌ தெரிவித்தார். மேலும் இவ்வ‌ங்கியின் மூல‌ம் இந்தியாவுக்கு அனுப்பும் ப‌ண‌மும் அதிக‌ரித்துள்ள‌து என்றார் அவ‌ர்.

ப‌ரோடா வ‌ங்கி உல‌க‌ முக்கிய‌ வ‌ணிக‌ ந‌க‌ர்க‌ளான‌ நியூயார்க், ல‌ண்ட‌ன், புருஸெல்ஸ், துபாய், ஹாங்காங் ம‌ற்றும் சிங்க‌ப்பூர் உள்ளிட்ட‌ இட‌ங்க‌ளில் த‌ன‌து கிளைக‌ளைக் கொண்டுள்ள‌து குறிப்பிட‌த்த‌க்க‌து.

Tags: துபாய்

Share this