Breaking News

மேலும் வர வேண்டும்! தோளும் தர வேண்டும்! தத்துவக்கவிஞர் இ. பதுருத்தீன் ( 94442 72269 )

நிர்வாகி
0
http://www.muslimleaguetn.com/news.asp?id=935
தாய்ச்சபை முஸ்லிம் லீக் குடிக்கக் குழாய் நீராகவும், குளிக்க குற்றால நீராகவும் சமுதாயத்திற்குப் பயன்பட்டு வருகிறது.

அதன் தோற்றம் கண்ணியமானது!

அதன் ஏற்றம் புண்ணியமானது!

தேர்தல் எனும் தீப்பந்தத்தை அது ஏந்தியது - ஊர் வெளிச்சம் பெறவே அன்றி, பெயர் வெளிச்சம் பெற அல்ல!


அதன் மனிதநேயம் - தேர்தலுக்காகத் தீர்மானிக்கப் பட்டதல்ல-எந்தத் தேடலுக்காகவும் திடப்பட்டதல்ல.

அது, கல் தடுக்கி விழாமல் கைத்தாங்கும் காருண்ய நோக்குடையது!

எனவே, அதன் பயணம், நேற்றும் தொடர்ந்தது- இன்னும் தொடர்கிறது-நாளையும் தொடரும் எவருக்காகவும் அது நிற்காது-எதற்காகவும் அது தயங்காது!

நட்சத்திரத்தைப் பிடுங்கி பிறையை நட்டுப் பார்த்தார்கள் சிலர்!
பிறை, நட்சத்திரம் இரண்டையும் பிழை செய்து, கறுப்பு - வெள்ளை எனக் கர்வத்துடன் பார்த்தார்கள் வேறு சிலர்!

இந்தக் கண்மூடித் தனங்கள் மண்மூடிப் போயின. மூன்றாவதாக முளைத்தவர்கள் பச்சை நிறத்தைக் கூடச் சேர்த்துக் கொடி கண்டார்கள்.
எனினும் பச்சிளம் பிறைக் கொடியின் நிழலைக்கூட இவர்கள் நெருங்க முடியவில்லை....

நாலூரில் நின்றவர்கள் நடுத் தெருவில் நிற்க - வேலூரில் நின்ற முஸ்லிம் லீக் வெற்றியூரில் இன்னும் உலா வந்து கொண்டிருக்கிறது!

புத்துணர்வோடு இன்றும் என்றும் சமுதாயப் பூந்தோட்டக் காவல்காரனாக முஸ்லிம் லீக் தன்னைப் புதுப்பித்தே வருகிறது!

நோன்பைப் பிடிக்கவும் விடுக்கவும் பிறையைப் பார்க்கும் சன்மார்க்கம்! நன்மையைக் கொடுக்கவும் - தீமையைத் தடுக்கவும் இளம்பிறைக் கொடியையே பார்க்கிறது சமுதாயம்.

அரிசிகள் பல. அரசியல் கட்சிகளும் பல. எனினும் பிரியாணி விருந்துக்கென்றே ஓர் அரிசி இருப்பது போல - இருந்து சிறப்பது போல - அரசியல் இயக்க முஸ்லிம் லீகே சமுதாயப் பசிக்கு விருந்தாகவும் - மருந்தாகவும் இருந்து வருகிறது.

காரணம் - இது கண்ணியகு காயிதெ மில்லத்தின் கால்வழி வந்தது; சிராஜுல் மில்லத்தின் தோள் வழி வந்தது; முனீருல் மில்லத்தின் கண் வழி, விழிப்புணர்வு டன் விளங்கி வருவதே!

எடுபிடிக்கும், அடிதடிக்கும் இளைய சமுதாயத்தை அழைக்காத முஸ்லிம் லீக்- கெடுபிடிக்கும் பழிவழிக்கும் உட்படுத்தாத முஸ்லிம் லீக் - கடைப்பிடிக்கும் ஒரே வழி கண்ணியமே!

புதிய இளைய தலைமுறையினர், தாய்ச்சபை லீகைத் தாங்கவும், அதன் நெறி ஓங்கவும் கைகோர்க்க மேலும் வர வேண்டும்; தோளும் தர வேண்டும்!

Tags: கவிதை

Share this