Breaking News

பெட்ரோல் விலையைக் குறைக்க விஜயகாந்த், சரத்குமார் வேண்டுகோள்

நிர்வாகி
0

பெட்ரோல், டீசல் விலை உயர்வை விலக்கி கொள்ள வேண்டும் என்று விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
நாடாளுமன்றத் தேர்தல்கள் முடிந்து விட்ட நிலையில் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதைபோல பெட்ரோலியப் பொருள்களின் விலை
உயர்த்தப்பட்டுள்ளன. இதன் விளைவாக பஸ் கட்டணம், அன்றாட இன்றியமையாத பொருள்களின் விலையும் உயரும்.
குறிப்பாகக் கடலில் மீன் பிடிக்கச் செல்
லும் மீனவர்களின் படகுகளுக்கு இந்த டீசல் விலை உயர்வால் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.
உண்மையிலேயே இந்திய அரசுக்கு சாதாரண மக்கள் மீது அக்கறை இருக்குமானால் பெட்ரோலியப் பொருள்களின்
விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என விஜயகாந்த் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார்: உலகளவில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் குறிப்பாக எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டுவதற்காக பெட்ரோல், டீசல் இவற்றின் விலைகளை உயர்த்தியிருப்பதாக அரசு காரணம் கூறுகிறது.
விலைவாசிகளின் அடிப்படையில் மக்கள்
படும் அவதியை மனதில் கொண்டு தற்போ
தைய விலையேற்றத்தைத் தவிர்த்திருக்க
லாம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மேலும் விலைவாசிகள் உயர்ந்து பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இந்த விலை உயர்வை அரசு விலக்கி கொள்ள வேண்டும். அத்தியாவசியப்
பொருள்களின் விலைகளை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

Share this