துபாயில் ஜும்ஆ அல் மஜித் கலாச்சார மையம்.
நிர்வாகி
0

துபாயில் ஜும்ஆ அல் மஜித் கலாச்சார மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழங்கால அரிய வகை நூல்கள். திருக்குர் ஆனின் பழைய பிரதிகள், கலாச்சார தகவல்கள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு வருகின்றன.தொழிலதிபர் ஜும்ஆ அல் மஜித் தனது சுய ஆர்வத்தின் காரணமாக இதனை உருவாக்கி உலகெங்கிலும் இருந்து வரும் ஆராய்ச்சியாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக இதனை செயல்படுத்தி வருகிறார். இங்கு சிறப்பு வாய்ந்த நூலகமும் செயல்பட்டு வருகிறது.சமீபத்தில் தமிழகத்தில் இருந்து வருகை புரிந்த மார்க்க அறிஞர்கள் மவ்லவி அஹ்மத் பஷீர் சேட் ஆலிம், மவ்லவி உமர்ஜஹ்பர் மன்பயீ ஆகியோர் இங்குள்ள நூல்கள் குறித்து தங்களது மகிழ்வினை வெளியிட்டனர். மேலும் தங்க பிளேட்டிலான திருக்குர்ஆனைப் பார்த்து வியந்தனர். பல்வேறு நூல்கள் குறுந்தகடுகளாக வெளியிடப்படுகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இம்மையத்தின் தொடர்பு முகவரி
Tel.:04-2624999
Fax:04- 2696950
P.O.:55106- Dubai - uae
E-mail:info@almajidcenter.org