Breaking News

துபாய் ஈமான் அமைப்பு ந‌ட‌த்தும் புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி

நிர்வாகி
0
துபாய் : துபாய் ஈமான் அமைப்பு அகில‌த்திற்கோர் அருட்கொடையாய் இந்த‌ அவ‌னியில் அருள‌ப்பெற்ற‌ அஹ்ம‌து ந‌பி ( ஸ‌ல் ) அவ‌ர்க‌ளின் புனித‌ மிஃராஜ் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி ஹிஜ்ரி 1430 ர‌ஜ‌ப் பிறை 27, 19.07.2009 ஞாயிறு மாலை இஷாத் தொழுகைக்குப் பின் 9.30 ம‌ணிக்கு தெய்ரா ப‌குதியில் உள்ள‌ லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் என்ற‌ழைக்க‌ப்ப‌டும் குவைத் ப‌ள்ளியில் நட‌த்த‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்ச்சிக்கு ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர் கூத்தாந‌ல்லூ அஹ்ம‌த் முஹைதீன் அவ‌ர்க‌ள் த‌லைமை தாங்குகிறார். ஜ‌னாப். அலி அஸ்க‌ர் பிலாலி புனித‌ மிஃராஜ் இர‌வு குறித்து சிற‌ப்புச் சொற்பொழிவு நிக‌ழ்த்த‌ இருக்கிறார்.

சொற்பொழிவைத் தொட‌ர்ந்து த‌ஸ்பீஹ் தொழுகை, திக்ரு, த‌வ்பா உள்ளிட்ட‌ நிக‌ழ்ச்சிக‌ள் ந‌டைபெறும். பெண்க‌ளுக்கு த‌னியிட‌ வ‌ச‌தி செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

இந்நிக‌ழ்வில் அனைவ‌ரும் க‌ல‌ந்து சிற‌ப்பிக்க‌ ஈமான் அமைப்பின் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா ( 050 467 4399 ) கேட்டுக் கொள்கிறார்.

Tags: துபாய் மிஃராஜ்

Share this