Breaking News

தேமுதிக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்

நிர்வாகி
0

இடைத்தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களி்ல் 4 பேர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் தனது கட்சியின் வேட்பாளர்களை விஜய்காந்த் நேற்று அறிவித்தார்.

அதன்படி கம்பம் தொகுதியில் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் செளந்திரபாண்டியன், இளையான்குடி தொகுதியில் ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக பொருளாளர் அழகு.பாலகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர். தொண்டாமுத்தூர் தொகுதியில் செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, பர்கூர் தொகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இதில் ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் எம்.சௌந்தரபாண்டியன் சென்னையில் இருப்பதால் நாளை மனு தாக்கல் செய்கிறார். அவரைத் தவிர மற்ற 4 பேரும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டனர்.

Tags: தே.மு.தி.க.

Share this