Breaking News

ஓரின‌ச்சேர்க்கை இய‌ற்கை நிய‌திக்கு விரோத‌மான‌து - மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி

நிர்வாகி
0
மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி
மேலைநாடுகளின் கலாச்சார சீர்கேட்டின் அடையாளமாகத் திகழும் ஓரினச் சேர்க்கையின் நாசகார விபரீதத்தை உணர்ந்து தான் நாடு சுதந்திரம் பெற்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட போது ஓரினச் சேர்க்கை சட்டப்படி குற்றத்திற்குரியதென்றும் நமது நாட்டின் ஒழுக்கப் பாரம்பரியத்திற்கு எதிரானதென்றும் அறிவிக்கப் பட்டது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் நபருக்கு இந்திய தண்டனை சட்டத்தின் 377 பிரிவின்படி 10 ஆண்டுகளிலிருந்து ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தண்டனை வழங்கும் இந்திய தண்டனை சட்டவிதியை நீக்கு வதற்கு அதாவது ஓரினச் சேர்க்கைக்கு எதிரான தடையை நீக்குவதற்கு தற்போதைய மத்திய காங்கிரஸ் அரசு முயற்சித்து வருவது இந்திய கலாச்சாரத்திற்கு விடப் பட்டுள்ள மிகப்பெரும் சவாலாகும்.
மத்திய அரசின் இந்த குறுமதி விபரீத முயற்சி ஒட்டு மொத்த மனிதகுலத்திற்கும் மிகப்பெரிய சீரழிவை உருவாக்கி விடும். இறைவன் அமைத்து கொடுத்தை இயற்கையான ஒழுக்கமுள்ள குண நலன்களை மறந்து தன்னிச்சையாக காட்டுமிராண்டித் தனமாக வாழ முயற்சிக்கும் ஒரு சில கலாச்சார சீர் கேட்டாளர்களின் நாசகார வாழ்க்கை சூழலுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்ட ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனை சட்டத்தை மறு சீராய்வின் பெயரால் ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு கொடுக்க மத்திய அரசு முனைந்திருப்பது மிகவும் அருவெறுக்கத்தக்கதாகும். இறைவன் வகுத்துள்ள விதிகளுக்கே இது மிகப்பெரிய சவாலாகும்.
முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவனால் படைக்கப்பட்ட முதல் மனிதர் ஆதம் என்றும் அவருக்கு ஜோடியாக ஹவ்வா என்ற பெண்ணும் படைக்கப் பட்டதாக கூறப்படுகிறது. இதைப் போலவே கிறிஸ்து வர்களின் பைபிளிலும் உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதாம் என்றும் அவரின் துணையாக ஏவால் என்ற பெண்ணும் தோன்றியதாக குறிப்பிடப்படுகிறது. பகவத் கீதையில் கூட ஆதி என்ற துவக்கம் சிவன் என்றும் அவரின் துணையாக பார்வதி என்றும் குறிப்பிடப்படுகிறது. இப்படி எல்லா சமயத்தினராலும் குறிப்பிடப்படுகின்ற உலகில் தோன்றிய முதல் மனிதர் என்ற நிலைப்பாட்டை சற்று ஆராய்ந்து பார்த்தால் ஒரு ஆணுக்கு ஜோடியாக ஒரு பெண்ணாகவும், ஒரு பெண்ணுக்கு ஜோடியாக ஒரு ஆணாகவும் தான் இருக்க முடியும் இருக்கவும் வேண்டும் என்ற தத்துவத்தை வெளிப்படுத்துகிறது. சிறு பிள்ளைக்கும் பளிச்சென புரியும் இந்த இறைத் தத்துவம் இன்றைய ஆட்சி யாளர்களுக்கு புரியாமலா போகும்? ஒரு ஆண் இன்னொரு ஆணுடனும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடனும் உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்ற ஓரினச் சேர்க்கையை ஆதரிப்போர் மனித சமுதாயத்தின் விரோதி களாகவே இருக்க முடியும்! இத்தகையவர்கள் மனிதருக்கு மட்டுமல்ல கடவுளுக்கும் தான் விரோதிகள்.
ஒரு பக்கம் எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி நோய்க்கெதிராக மக்களின் வரிப்பணத்தில் விளம்பரம் செய்யும் ஆட்சியாளர்கள் மறு பக்கம் எய்ட்ஸ் என்னும் கொலைகாரனுக்கு சிகப்புக் கம்பளம் விரித்து வரவேற்பு கொடுக்க நினைப்பது எவ்வகையில் நியாயம்? இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் எத்தனையோ பிரிவுகள் உயிரோட்டம் கொடுக்கப்படாமல் முடமாகி கிடக்கும் போது ஓரினச் சேர்க்கைக்கெதிரான இந்திய தண்டனை சட்டத்தை மட்டும் மாற்றி அமைக்கத் துடிப்பது ஏன்?
இந்திய அரசியல் சாசன சட்டவிதி 45 என்பது அனைவருக்கும் இலவச கல்வி என்பது தான். ஆனால் இன்றோ குழந்தைகளை மழலையர் பள்ளியில் சேர்ப்பதற்கே பல ஆயிரங்களை கொட்டி தீர்க்க வேண்டியுள்ளது. அந்தளவுக்கு கல்விக் கூடங்களெல்லாம் வியாபார ஸ்தலங்களாகி விட்டன.
அரசியல் சட்டவிதி 46 அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் எனக் கூறுகிறது. சட்டமியற்றி 60 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது, ஆனால் இன்று வரைக்கும் தெருக்குழாயில் வரும் குடிநீரில் சாக்கடையும் கலந்து வருகிறதே ஆட்சியாளர் களால் இதை தடுக்க முடிகிறதா? மனித உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் சுகாதார சீர்கேடு தடுக்கப்பட வில்லை. இதைப் பற்றியெல்லாம் கவலை கொள்ளாத மத்திய அரசு அவசிய அவசரமாக எய்ட்ஸ் என்னும் ஆட்கொல்லி அரக்கனுக்கு சாதகமாக ஓரினச் சேர்க்கை தவறல்ல என்ற நச்சுக் கருத்தை ஆதரிக்க முன் வருவது வெட்கக் கேடானதாகும்.
இந்திய தேசத்தின் சுதந்திர போராட்டத்தந்தையான மகாத்மா காந்தி வலியுறுத்தியது பூரண மது விலக்கு! இதை அரசியல் சட்டவிதி 46- ன் ஒரு பகுதியில் நாடு முழுவதும் பூரண மது விலக்கு அமுல் படுத்தப்பட வேண்டும் என கூறுகிறது. எத்தனை மாநிலங் களில் இந்த மது விலக்கு அமுலில் உள்ளது? நாடு சுதந்திரம் அடைவதற்கு காங்கிரஸே காரணம் என பெருமைப் பட்டுக் கொள்ளும் காங்கிரஸ்காரர்கள் ஆளும் மாநிலங் களிலேயே மதுவிலக்கு அமுல்படுத்தப்படாதது வேதனைக்குரியதல்லவா?
பா.ஜ.க. மதவாதக் கட்சியென்றாலும் அதனுடைய ஆட்சி நடைபெறும் குஜராத் மாநிலத்தில் பூரண மது விலக்கு அமுல்படுத்தப்பட்டிருப்பது பெருமைக்குரிய விஷயம் தானே! அங்கு தான் மகாத்மா காந்தியும் பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மகாத்மா காந்தியின் கொள்கைக்கு உயிரோட்டம் கொடுத்திருக்கும் பா.ஜ.க இந்த விஷயத்தில் காங்கிரஸை விட மேலோங்கியே நிற்கிறது.
போலியான தேசிய வாதம் பேசும் கதர் சட்டைக் காரர்களின் சமீபத்திய எந்த நடவடிக்கையும் மக்கள் போற்றும் வகையில் இல்லை என்பது கசப்பான உண்மை தான். அதனுடைய அடையாளமாகத்தான் தற்போது ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் நிலை என்னவென்பதை வெளிப் படையாக அதன் தலைமை அறிவிக்க வேண்டும் இந்திய பாரம்பரியத்தையும் கலாச்சார ஒழுக்கத்தையும் யார் பாதுகாக்கிறார்களோ இல்லையோ? கண்டிப்பாக தமிழர்கள் பாதுகாப்பார்கள். தமிழர்களின் இந்த எண்ணவோட்டத்தை தமிழக அரசு அப்படியே மத்திய அரசுக்கு குறிப்பாக காங்கிரஸுக்கு உணர்த்த வேண்டும்.
ஓரினச் சேர்க்கை யென்பது ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாசம் விளைவிக்கும் கேடுகெட்ட செயல் தான் என பறை சாற்றுவதின் மூலம் தமிழர்களின் கண்ணியமும், ஒழுக்கமும் பார் போற்றப்பட வேண்டும். ஓரினச் சேர்க்கைக்கு ஆதரவு என்ற விபரீத முயற்சியை கைவிட்டு விட்டு மக்கள் நலப்பணிகளில் கவனம் செலுத்துமாறு மத்திய அரசை வற்புறுத்த ஒவ்வொரு ஒழுக்க விரும்பி களும் குரல் கொடுக்க வேண்டும். இதை ஓர் அகிம்சை ரீதியில் அணுகுவோம்! ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாகப் பாடுபடுவோம்!

Tags: மெளலவிகீழை ஜஹாங்கீர் அரூஸி

Share this