Breaking News

டெல்லி இமாம் அப்துல்லாஹ் புகாரி காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்

நிர்வாகி
0
டெல்லி இமாம் அப்துல்லாஹ் புகாரி காலமானார் தலைவர் பேராசிரியர் இரங்கல்
இஸ்லாமிய மார்க்கத் தின் கலங்கரை விளக்கமாக திகழ்ந்த டெல்லி இமாம் மௌலானா அப்துல்லாஹ் புகாரி காலமானார்.
இச்செய்தி அறிந்ததும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்திய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:
டெல்லி ஜாமிஆ மஸ்ஜிது இமாம் மௌலானா அப்துல்லாஹ் புகாரி சாஹிப் அவர்கள் தமது முதிர்ந்த வயதில் இறையடி சேர்ந்தார் என்னும் செய்தியால் நமது இதயங்கள் வருத்தத்தில் ஆழ்ந்துள்ளன.
ஷாஹி இமாம் என்று போற்றப் பெறும், புகாரி சாஹிப் அவர்கள், பிரிக்கப்படாத இன்றைய உஸ்பெக்கிஸ்தான் நாட்டின் புகாராவில் இருந்து இந்தியா வந்து முகலாயர் ஆட்சி காலத்தில் மார்க்க மேதைகளாக விளங்கியவர் களின் வழித்தோன்றலாவார். பல நூறாண்டு காலமாக ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் பொறுப்பினை இவரின் முன்னோர்கள் வகித்தனர், இன்று புகாரி இமாமின் மூத்த மகனார் அந்த பொறுப்பை ஏற்றியிருக்கிறார்.
ஜாமிஆ மஸ்ஜிது நிர்மாணிக்கப்பட்டு, சக்கரவர்த்தி ஷாஜஹான் மஸ்ஜிது இமாமை முதன் முதலில் நியமித்த அந்தக் காலந்தொட்டு இன்றுவரை ஒரே குடும்பத்தினர் வாழையடி வாழையாக அந்த இமாம் பொறுப்பை ஏற்றுவருவதால், ஷாஹி இமாம் என்னும் பெயருக்கு மிகப் பெயரிய மதிப்பும் அந்தஸ்தும் நீடிக்கிறது.
பழைய டெல்லி பகுதி மக்கள் இமாம் சாஹிபின் சீடர்களைப் போலவன்றி, இவரின் ஆளுகைக்கு உட்பட்வர்கள் போல பல நேரங்களில் செயல்பட்டுள்ள வரலாறுகள் உள்ளன. இதனால் அரசியலில் ஈடுபட வேண்டும் என்னும் நிலைக்கு ஷாஹி இமாம் உந்தப்பட்டார். பெரியவர் புகாரி இமாம் ஷாஹி இமாம் கவுன்சில் என்னும் ஓர் அமைப் பினைத் தோற்றுவித்து அகில இந்திய அளவிலான அரசி யல் இயக்கமாக்கப் பெரிதும் முயன்றார்.
இதே நிலையை இன்றைய இமாமும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். தனியொரு அரசியல் கட்சியை நடத்தியுள்ளார். இப்போது அந்த கட்சிக்கு வட மாநிலத் தில் முக்கியத்துவம் இல்லாமல் ஆகிவிட்டது.
மௌலானா அப்துல்லாஹ் புகாரி சாஹிப் அவர்கள் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஷாஹி இமாம் கவுன்சில் அமைக்க முயன்ற போது, அவருடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைமையில் அவர் பணியாற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். இரண்டு மணி நேரம் அவருடன் பல்வேறு விஷயங் கள் பற்றிக் கருத்து பரிமாற்றம் செய்ய முடிந்தது.
இன்றைய இமாம் அஹமது புகாரி அவர்களும், அவரின் சகோதரர் தாரிக் புகாரி அவர்களும் 2004ல் லிபியாவில் நடை பெற்ற உலக முஸ்லிம் அறிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தியத் தூதுக்குழுவில் அவர் களுடன் நானும் செல்லும் வாய்ப்பு கிட்டியது.
திருச்சியில் நடைபெற்ற மண்டல முஸ்லிம் லீக் மாநாட்டில் மௌலானா தாரிக் புகாரி பங்கேற்று சிறப்பான உரையாற்றி புதிய வரலாற்றையே உருவாக்கினார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீதும், அதன் தலைவர் மீதும் மிகுந்த அன்பும்பாசமும் கொண்ட டெல்லி இமாம் கள். அந்தக் குடும்பத் தின் தலை மகனாய்த்திகழ்ந்த மௌலானா அப்துல்லாஹ் புகாரி அவர்களின் மறைவு மிகப் பெரும் இழப்பே ஆகும். மார்க்கத்தின் கலங்கரை விளக்காக விளங்கிய இமாம் அவர்கள் மறைந்து விட்டார்கள். அவர்களின் மஃபிரத்துக்கு அனைவரும் துஆ செய்வோம்.
நன்றி: http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=106

Tags: வபாத்செய்தி

Share this