Breaking News

சவூதி அரேபியாவில் டாக்டர்களுக்கு அரசுப் பணி

நிர்வாகி
0
சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களாகப் பணிபுரிவதற்கு டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ("ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்') அறிவித்துள்ளது.
தில்லியில் வரும் ஜூலை 26 முதல் ஜூலை 31-ம் தேதி வரையும், பெங்களூரில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி வரையும் இதற்கான நேர்காணல் நடைபெறும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை அடையாறில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் (தொ.பே.: 24464268) தலைவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: சவூதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குழந்தை மருத்துவம், நரம்பியல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், சிறுநீரக மருத்துவம், மகப்பேறு மருத்துவம், பொது மருத்துவம், மூட்டு மருத்துவம் உள்பட 15-க்கும் மேற்பட்ட சிறப்பு மருத்துவத் துறைகளில் மருத்துவர்களாக உள்ளவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இத்தகைய சிறப்பு மருத்துவர்கள் உரிய ஆவணங்களுடன், "ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20' என்ற முகவரிக்கு வரும் ஜூலை 31-ம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ நேரில் வர வேண்டும்.
இரண்டு ஆண்டு அனுபவம் உள்ள டாக்டர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 55. தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்கள் விண்ணப்பிக்கத் தேவை இல்லை.
சம்பளம் என்ன? தேர்வாகும் எம்.பி.பி.எஸ். மற்றும் டிப்ளமோ முடித்த டாக்டர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.82,560 மற்றும் இதர படிகள்; எம்.டி., எம்.எஸ்., டிஎன்பி முடித்த டாக்டர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.1,03,040 மற்றும் இதர படிகள்; டி.எம்., எம்.சிஎச்., பி.எச்டி. முடித்த டாக்டர்களுக்கு மாதச் சம்பளம் ரூ.1,35,168 மற்றும் இதர படிகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையதளத்தில் www.omcmanpower.com தெரிந்து கொள்ளலாம்.

Tags: சவூதி டாக்டர்

Share this