தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் இமாம் காலமானார்
நிர்வாகி
0
புதுதில்லி, ஜூலை 8- புகழ்பெற்ற தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் ஷாஹி இமாம் மவுலானா சயத் அப்துல்லா புஹாரி இன்று காலமானார். அவருக்கு வயது 87.
இத்தகவலை ஜும்மா மசூதியின் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மவுலானா சயத் அப்துல்லா புஹாரி தில்லி ஜும்மா மசுதியின் 12வது ஷாஹி இமாம் ஆவார். அவரது தந்தை மவுலானா சயத் ஹமீத் புஹாரி 11வது ஷாஹி இமாமாக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் உள்ள சம்ஹார் என்னும் ஊரில் பிறந்த மவுலானா சயத் அப்துல்லா புஹாரி தில்லியில் உள்ள அப்துர் ரப் மதரஸôவில் கல்வி பயின்றார். 1946ல் இவர் ஜும்மா மசூதியின் துணை ஷாஹி இமாமாக நியமிக்கப்பட்டார்.
இவருக்கு 4 மகன்களும் 2 மகள்களும் உள்ளனர். இதில், அகமது புஹாரி என்னும் மகன் தான் தற்போது ஜும்மா மசூதியின் ஷாஹி இமாமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags: வபாத்செய்தி