Breaking News

ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாம்! - முஸ்லிம் என்பதால்தானே தியாகத்தை மறைக்கிறீர்கள்?

நிர்வாகி
0
ஆகஸ்ட் 15 ம் தேதி இந்தியாவின் சுதந்திர தினமாம் அன்றைய தினம் நாமும் (முஸ்லிம்களும்) மறக்காமல் ஏற்றுவோம் தேசியக் கொடியை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போற்றத்தக்க உம்மத்தல்லவா நாம்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களே நாட்டுப்பற்றே ஈமானின் ஒரு பகுதி என்று. நம் ஈமானை உறுதிப்படுத்தத்தானே இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினோம். நாம் பெற்ற சுதந்திரத்தை நாம் தானே மதிக்க வேண்டும். நாம் மறக்க முடியுமா? நம் முன்னோர்களும் மூதாதையர்களும் போராடிப் பெற்ற சுதந்திரத்தை நம்மால் மறக்கத்தான் மூடியுமா?
இன்றைய ஆட்சியாளர்களுக்கும், முஸ்லிம் எதிர்ப்பாளர்களுக்கும் சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங்கை தெரியும், அவரை நினைவுகூர்ந்து போற்றத் தெரியும். சுதந்திரப் போராட்ட தியாகி பகத்சிங் தூக்கிலிடப்பட்ட அதே நாளில்தானே சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் அஸ்வ குல்லா கான் தூக்கிலிடப்பட்டார். அவரைத்தெரியவில்லையா இன்றைய ஆட்சியாளர்களுக்கும், சுதந்திரப்பெருமை பேசுவோருக்கும். ஏன் இந்தப் பாரபட்சம்? முஸ்லிம் என்பதால்தானே.
வெள்ளையனின் கடல் ஆளுகையை எதிர்த்து சுதேசிக் கப்பல் விடுவதற்கு ஒரு டிரஸ்ட் அமைக்கப்பட்டு, கப்பல் வாங்குவதற்கு அன்றைய இந்திய நாளிதழில் பாராதியார் விளம்பரம் போட்டதற்கு வந்ததோ அற்பமான சில நூறு ரூபாய்களும், சில அனாக்களும்தான். ஆனால் கப்பலை வாங்குவதற்கு அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவை மறைத்துவிட்டார்கள். முஸ்லிம் என்பதால்தானே. கப்பல் ஓட்டிய தமிழன் வ.உ.சி என்று பள்ளிப் பாட புத்தகம் உட்பட ஆங்காங்கே நினைவுக் கூறப்படுகிறது. மண்டபங்கள் அமைக்கப்படுகிறது. வ.உ.சி ஓட்டிய கப்பலுக்கு தன் கஜானாவைக் காலிசெய்து அன்றைய மதிப்பில் ரூ. 10 லட்சம் வழங்கிய ஹாஜி பக்கீர் முஹம்மதுவுக்கு இந்த ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்? ஏன் மறந்தார்கள்? முஸ்லிம் என்பதால்தானே.
இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும் இந்திய வரலாற்றிலிருந்து இந்த உண்மையை மறைக்கமுடியுமா? உலக வரலாற்றிலிருந்து இவற்றை எடுக்கத்தான் முடியுமா? உள்ளதை உள்ளபடி நினைவு கூற வெட்கம் ஏன்? தயக்கம் ஏன்? இந்திய முஸ்லிம்கள் அவர்களின் விகிதாச்சாரத்தைவிட பன்மடங்கு அதிகமாக சுதந்திர போராட்டத்தில் பங்குக்கொண்டுவிட்டார்களே என்ற தயக்கம், வெட்கம் தானே காரணம்.
முஸ்லிம்களாகிய எங்களுக்கு எங்கள் தாய்த்திரு நாட்டை மதிக்கத்தெரியும் போற்றத்தெரியும். சுதந்திரப்போராட்ட தியாகிகளை பாகுபாடு பார்க்காமல், மதம் பார்க்காமல் புகழத் தெரியும் அவர்களை கண்ணியப்படுத்தத் தெரியும்.
இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும் சுதந்திரத்தின்போது முஸ்லிம்களின் தியாகத்தை மறைத்தாலும், மறந்தாலும் கவலைப்படும் சமுதாயம் அல்ல முஸ்லிம் சமுதாயம்.
இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும் சொல்லித்தான் சுதந்திரத்தின்போது முஸ்லிம்களின் தியாகத்தை தெரிந்துக்கொள்ள வேண்டிய நிலையிலும் இல்லை இந்த முஸ்லிம் சமுதாயம்.
தேசப்பிதா மகாத்மா காந்தி பிறந்த மாநிலமான குஜராத்தில், பிஜேபி யின் ஆட்சிக்காலத்தில் (குஜராத்தில் பிஜேபி யின் மோடி மத்தியில் பிஜேபி யின் வாஜ்பாய்) நடந்த கலவரத்தை ஒவ்வொரு சுதந்திர தினத்தின் போதும் முடிந்தால், துணிவிருந்தால் நினைவு கூறட்டும் இந்திய ஆட்சியாளர்களும் சுதந்திரப்பெருமை பேசுவோரும்.

Tags: சுதந்திரதினம்

Share this