Breaking News

இந்தியாவில் இருந்து அமீரகம் வரும் பயணிகளுக்கு ..!

நிர்வாகி
2

அபுதாபி பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தேசிய அவசரநிலை மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நுழைய இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை, நேபாளம், நைஜீரியா மற்றும் உகாண்டா உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து அமீரக செல்லுபடியாகும் குடியுரிமை விசா மற்றும் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களை அனுமதி வழங்கி உள்ளது.

முக்கியமாக தகவல்கள்:

செல்லுபடியாகும் ரெசிடென்சி விசா வைத்து இருக்க வேண்டும். இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் குறைந்தது, 14 நாட்கள் கடந்திருக்க வேண்டும். இதற்கான சான்றிதழில் அவர்கள் வைத்திருக்க வேண்டும்.

பயணிகள் விமான நிலையத்திற்கு வரும் முன்பாக, 48 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட covid19 பரிசோதனை சான்றிதழ் மற்றும் QR குறியீடு மூலம் வைத்திருக்க வேண்டும்.

அமீரகம், SputnikV, Janssen (Johnson and Johnson), Moderna, Novavax, OxfordUni AstraZeneca, PfizerBioNTech, Sinopharm, and Sinovac (CoronaVac) இந்த 8 தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்களை அனுமதிக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகம் வரும் பயணிகள் ica நுழைவு அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்: https://smartservices.ica.gov.ae/.../client/default.html...

மேலும் தகவல்களுக்கு தேசிய அவசரநிலை மற்றும் நெருக்கடி மேலாண்மை ஆணையம் இணையதளத்தில் பார்வை இடலாம்: https://www.gdrfad.gov.ae/en

விசா சம்பந்தமான தகவல்களுக்கு amer இணையதளத்தில் பார்வை இடலாம்: https://amer247.com ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வித் துறையில் பணிபுரியும் ஊழியர்கள், கல்வியை முடிக்கும் மாணவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி மற்றும் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிகிச்சை முடிக்க வேண்டியவர்கள் இவை அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டாலும், இல்லாவிட்டாலும் அமீரகத்துக்கு திரும்பி வருவதற்கான கிரீன் சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது.

அமீரக குடியிருப்பாளர்கள் தங்கள் விமானங்களில் ஏறுவதற்கு முன்பாக விரைவு பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று துபாய் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் விமான நிறுவனங்களுக்கு வழங்கிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை உள்பட, 34 சர்வதேச விமான நிலையங்களில் விரைவு பிசிஆர் பரிசோதனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமான ஆணையம் தெரிவித்துள்ளது.

இப்போது சுற்றுலா விசாவுக்கான இந்த அறிவிப்பும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அமீரகம் வருவதற்கான தேவையான தகவல்களை பயண முகவர் மூலமாக தெரிந்து கொல்லுங்கள்.

Tags: உலக செய்திகள்

Share this

2 Comments