Breaking News

குவைத்தில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து:41 பேர் மரணம்

நிர்வாகி
0
குவைத்திலிலுள்ள‌ ஜ‌ஹ்ரா பிர‌தேச‌த்தின் அயூன் ப‌குதியில் திரும‌ண‌க்குழுவின‌ர் த‌ங்கியிருந்த‌ கூடார‌த்தில் தீப்ப‌ற்றிய‌தால் ஏற்ப‌ட்ட‌ விப‌த்தில் குறைந்த‌து 41 பேர் ம‌ர‌ண‌ம‌டைந்துள்ள‌தாக‌ த‌க‌வ‌ல்க‌ள் கூறுகின்ற‌ன‌.
இதில் பெரும்பாலும் பெண்க‌ள்.சுமார் 50 ந‌ப‌ர்க‌ளுக்கு காய‌ம் ஏற்ப‌ட்டுள்ள‌தாக‌வும் அதில் பெரும்பாலானோரின் நிலைமை க‌வ‌லைக்கிட‌மாக‌ உள்ள‌தாக‌ அல்ஜ‌ஸீரா செய்தியாள‌ர் ஸாத் அல் என‌ஸி கூறுகின்றார்.திரும‌ண‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெற்ற‌ கூடார‌த்தில் மெழுவ‌ர்த்தி ப‌ற்ற‌வைத்தில் ஏற்ப‌ட்ட‌ நெருப்புதான் இந்த‌ விப‌த்திற்கு கார‌ண‌ம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.க‌ட‌ந்த‌ 40 ஆண்டுக‌ளில் குவைத்தில் ஏற்ப‌ட்ட‌ மிக‌ப்பெரிய‌ விப‌த்து என‌ செய்திக‌ள் கூறுகின்ற‌ன‌.கூடார‌த்திலிருந்து வெளியேற‌ எந்த‌வொரு அவ‌ச‌ர‌ மாற்றுவ‌ழி இல்லாத‌தும் ம‌ர‌ண‌ எண்ணிக்கை அதிக‌ரிக்க‌ கார‌ண‌ம் என‌ கூற‌ப்ப‌டுகிற‌து.
செய்தி:அல் ஜ‌ஸீரா

Tags: குவைத் தீ விபத்து

Share this