Breaking News

இலவசத் திட்டங்களால் அரசுக்கு ரூ.75,000 கோடி கடன்: விஜயகாந்த்

நிர்வாகி
0

தமிழக அரசின் இலவசத் திட்டங்களால் ரூ. 75,000 கோடி கடன் ஏற்பட்டுள்ளது. இதனால், மக்களின் வரிப் பணம் வீணாகிறது என விஜயகாந்த் தெரிவித்தார்.
இளையான்குடி தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணனை ஆதரித்து, அக் கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை மாலை பிரசாரம் செய்தார். சூராணம், வண்டல், சாலைகிராமம், இளையான்குடி உள்ளிட்ட இடங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், திறந்த வேனில் நின்றவாறு பேசியது:
இந்த ஆட்சியில் இலவசத் திட்டங்களை மட்டுமே செயல்படுத்தி வருகின்றனர்.
எல்லாமே இலவசமாக வழங்குவதால், அரசுக்கு கடன் மேல் கடன் ஏறிக் கொண்டிருக்கிறதே தவிர, வேறொன்றும் பயன் இல்லை. இலவசத் திட்டங்களால் மட்டும் அரசுக்கு ரூ. 75,000 கோடி கடன் சுமை ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தில் உள்ளவர்களின் தலைக்கு ரூ. 12,000 வீதம் கடன் சுமையை அரசு ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கெனவே, இந்தத் தொகுதியில் ஒருவரை நிறுத்தி வெற்றி பெற வைத்தனர். அவர் வேறு ஒரு கட்சிக்குத் தாவியதால், இடைத்தேர்தல் வந்திருக்கிறது. எனவே, இந்தத் தேர்தல் தேவையில்லாதது. மக்கள் வரிப்பணம்தான் வீணாகிறது. விவசாயிகளுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை. விவசாயிகள் வறுமையில் வாடித் தவிக்கின்றனர்.
எனவே, எங்களுக்கு ஒருமுறை வாய்ப்புத் தந்து பாருங்கள் என்றார் அவர்.

Tags: தே.மு.தி.க.

Share this