Breaking News

8 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செ‌ய்ய தேசிய லீக் கோரிக்கை

J.நூருல்அமீன்
0
அண்ணா நூற்றாண்டு விழாவையொ‌ட்டி 8 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி விடுதலை செ‌ய்ய தேசிய லீக் தலைவர் எம்.பஷீர் அகமது கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள ‌அ‌றி‌க்கை‌யி‌ல், குற்றங்களுக்கு தகுந்தாற் போல் சிறை தண்டனை மாறுபடும். ஒருவர் 8 ஆண்டுகள் சிறையில் இருந்தாலே, குற்ற எண்ணத்தில் இருந்து விடுபட்டு நன்னடத்தையுடன் வாழ தொடங்கி விடுகிறார் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், தமிழக சிறைகளில் இந்த கால அளவுக்கு மேலும் ஏராளமானோர் உள்ளனர். இவர்களின் குடும்பத்தில் திருமண வயதில் மகனும் மகளும் உள்ளனர்.

எனவே, 8 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களையும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு தண்டனை குறைப்பு, விடுதலையில் பாரபட்சம் காட்டாமல் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு விடுதலை செய்ய முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்று பஷீர்அகமது கோ‌ரி‌‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

Tags: தேசிய லீக்

Share this