Breaking News

குழந்தைக்கு சாக்லேட் வாங்கும் போது எச்சரிக்கை

நிர்வாகி
0

சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்கப்படும் சாக்லேட் வகைகளால் குழந்தைகளுக்கு பெரும் ஆபத்து என்பதால் அவற்றை இந்தியாவில் விற்பனை செய்ய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். ஏற்கெனவே சீனாவில் தயாராகும் மருந்துகள், மொபைல்கள் (ஐஎம்இஐ கோட் இல்லாதவை), பொம்மைகள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதையோ, விற்கப்படுவதையோ அனுமதிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்துள்ளது. சீனத்து பால் பொருட்களுக்கு முழுமையான தடை உள்ளது இந்தியாவில்.இப்போது சீனாவில் தயாராகும் சாக்லேட் வகைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக மருத்துவ அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மத்திய அரசு, சீனத்து சாக்லேட்டுகளுக்கு முழுமையான தடையை அறிவித்துள்ளது. ஏற்கெனவே இருப்பில் இருந்தாலும், இந்த சாக்லேட்டுகளை விற்க வேண்டாம் என்றும் கடைக்காரர்களுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

Tags: எச்சரிக்கை

Share this