Breaking News

முஸ்லிம்களிடம் வரம்பு மீறுகிறது அமெரிக்கா முஸ்லிம் லீக் கண்டனம்

லால்பேட்டை . காம்
0
நடிகர் ஷாருக்கானை அமெரிக்க விமான நிலை யஅதிகாரிகள் நடத்திய 2 மணி நேர விசாரணை நாடு முழுவதும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த விவ காரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவின் விளக் கத்தை மத்திய அரசு நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று தமிழ் நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் பேராசிரி யர் கே.எம். காதர் மொகி தீன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருப்ப+ரில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்திருப்பதா வது-
முஸ்லிம்களிடம் அமெரிக்க அரசு தொடர்ந்து வரம்பு மீறும் செயலை செய்து வருகிறது. அமெரிக்கா முஸ்லிம் களுக்கு எதிரான நாடு அல்ல என்று ஒபாமா தெரிவித்துள்ளபோதிலும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடவடிக்கைகள் அந்த நாட்டில் தொடர்ந்து நடைபெறுகிறது. அதற்கு உலகப் புகழ்பெற்ற நடிகர் ஷாருக்கானை 2 மணி நேரத்துக்கும் மேல் சோதனைக்கு உட்படுத்தி யது உதாரணம். இதற்கு முன்பு கூட நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், புகழ்பெற்ற விஞ்ஞானியு மான டாக்டர் அப்துல் கலாம் அவர்களுக்கும், மலையாள நடிகர் மம் முட்டி, நடிகர் கமல் ஹாசன் உள்ளிட்ட பல பிரமுகர் களுக்கும் ஏற்பட்டுள்ளது.

முஸ்லிம்களிடம் வரம்பு மீறும் அமெரிக்காவின் இதுபோன்ற செயல் கண்டனத்துக்குரியது. இதுகுறித்து ஒபாமாவின் விளக்கத்தை பெற்று மத்திய அரசு நாட்டு மக்க ளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்தார்

Tags: அமெரிக்கா கண்டனம் முஸ்லிம் லீக்

Share this