Breaking News

சிதம்பரம் கட்டுமன்னர்கோவில் பகுதி வெள்ள பாதிப்பு ஆலோசனை

நிர்வாகி
0
சிதம்பரம்: சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் வெள்ள பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாக்காளில் ஆண்டு தோறும் மழைக்காலங்களில் கடுமையாக வெள் ளப் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த ஆண்டு பருவ மழை விரைவில் துவங்க உள்ள நிலையில் வெள்ள பாதிப்பு ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்வது குறித்து சிதம்பரம் ஆர்.டி. ஓ., அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., மீனாட்சி தலைமை தாங்கினார். தாசில்தார்கள் தனவந்தகிருஷ்ணன், வீரபாண்டியன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மாணிக்கம் மற்றும் போலீஸ், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் வடிகால் வாய்க்கால்களை தூர்வாரி தண்ணீர் வடிய தயார்படுத்துவது.

இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கள், வருவாய் ஆய்வாளர் கள் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பது.வெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைள் குறித்து முன்கூட்டியே திட் டமிட்டு தயாராக இருந் திட ஆலோசனை வழங் கப்பட்டது.

Tags: ஆலோசனை

Share this