Breaking News

அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை இழந்து தவிக்கிறேன்|||தலைவர் பேராசிரியர் இரங்கல்

நிர்வாகி
0
மணிச்சுடர் நாளிதழ் வெளியீட்டாளரும், தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஏ. அப்துல் ஹக்கீம் மறைவு குறித்து தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி-
தமிழக முஸ்லிம்களின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்த தமிழ் அறிஞர் - இலக்கியச் செல்வர் - முஸ்லிம் லீகின் மாபெரும் வழிகாட்டி சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் அவர்களின் இரண்டாவது புதல்வர் அப்துல் ஹக்கீம் அவர்கள் சில தினங்களாக நோய் வாய்ப்பட்டிருந்து இன்று (25-08-2009) செவ்வாய்க் கிழமை காலை 9.30 மணியளவில் காலமான செய்தி மிகுந்த வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி யுள்ளது. சகோதரர் அப்துல் ஹக்கீம் இளமைக்காலம் முதல் முஸ்லிம் லீக் இயக்கத்தோடு தன்னை பின்னிப் பிணைத்து கொண்டு வாழ்ந்தவர். அடையாறு பிரைமரி முஸ்லிம் லீக் அமைப்பதில் முன்னணியில் இருந்தவர்

காலப்போக்கில் முஸ்லிம் லீகின் மாநிலப் பொருளாள ராக உயர்ந்தார். அவருடைய பதவிக்காலத்தில்தான் வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட்டு மாபெரும் வெற்றி கிடைத்தது.

தலைமை நிலையச் செயலாளராக அவர் செயல் பட்ட காலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகிற்கும் - எனக்கும் சட்டரீதியான பல்வேறு இடைய+றுகளும், ஏராளமான வழக்குகளும் நடைபெற்றன. அவைகளில் நாம் வெற்றியடைவதற்கு அரிய ஆலோசனைகளையும், உரிய தகவல்களையும் தந்து பெரும் ஒத்துழைப்பு அளித்தார்

சிறந்த நிர்வாகியாகவும், தொழில் வல்லுநராகவும் வெளிநாடுகளோடு தொடர்புடைய பல தொழில் அதிபர்களுக்கு அறிவுரை கூறக்கூடிய ஆற்றல் பெற்ற வராகவும் விளங்கியவர். அவருடைய அறிவுரையாலும், வழிகாட்டுதலாலும் ஆயிரக்கணக்கில் தமிழகத்தில் இருந்து அரபு நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றவர்கள் இன்றைக்கும் நன்றி கூறிக் கொண்டிருக் கிறார்கள்.
முஸ்லிம் லீக் இயக்கப் பணிகளிலும், தன்னை முழுமையாக நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடந்ததற்கு பின்னர் தீவிரமாக இயக்கப்பணிகளில் அரசியல் கூட்டணி முடிவுகள், தேர்தல் சின்னம் தேர்வு செய்தல் போன்ற பிரச்சினை வரும்போதெல் லாம்ஆலோசனை சொல்லி வந்தார். என்னைப் பொறுத்த வரையில் பல நேரங்களில் அவருடைய ஆலோசனை பெற்று அதன்படி முடிவெடுத்தேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்றிட அவர் ஆலோசனை காரணமாக இருந்ததை நினைத்து நான் பெருமையடைகிறேன்.
எம்.ஏ. பொது நிர்வாக பட்டம் பெற்று தேறியவர். அச்சுக்கலையில் தனிப்பட்டமும் பெற்றவர். படித்துக் கொண்டேயிருப்பதில் அவர் தந்தையை பின்பற்றி வாழ்ந்த சிறப்பு அவருக்கு உண்டு.
முஸ்லிம் சமுதாயத்திற்கும் - முஸ்லிம் லீகிற்கும் நாளேடு இல்லை என்ற குறையை நிவர்த்திக்க வேண்டும் என்பதற்காக ஹமெட்ராஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் நிறுவனத்தை துவங்குவ தற்கு மூல காரணமாக இருந்து உழைத்தவர். தமது தந்தை சிராஜுல் மில்லத் அவர்களோடு இணைந்து நிறுவனத்தை பதிவு செய்து ஹமணிச்சுடர் நாளிதழை வெளியிடுவோராக இருந்து பணியாற்றியவர்
1987-லிருந்து ஹமணிச்சுடர் நாளேட்டை சிறந்த ஒரு பத்திரிகையாக உயர்த்த வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்த முயற்சி மேற்கொண் டார். 1996-ல் சிராஜுல் மில்லத் அவர்கள் ஹமணிச்சுடர் நாளிதழுக்கு என்னைப் பொறுப்பாளராக்கிய சமயத்தில் எல்லா வகையிலும் ஒத்துழைப்பு கொடுத்து எப்படியாவது தமிழ்நாட்டில் பிரபலமான நாளேடாக மணிச்சுடரை ஆக்க வேண்டும் என்று தொடர்ந்து உற்சாகமூட்டியவர். இறுதி வரை மணிச்சுடர் வெளியீட் டாளராக தொடர்ந்து இருந்து மிகப் பெரிய சேவையை நமக்கு அளித்துச் சென்றிருக்கிறார்

அந்த அன்புச் சகோதரரை - நல்ல ஆலோசகரை - அப்பழுக்கற்ற முஸ்லிம் லீகரை - அரிய குணங்கள் பெற்ற அரசியல் ஆலோசகரை நாம் இழந்து வேதனைப் பட்டுக் கொண்டிருக்கிறோம்
அவருடைய துணைவியார், ஒரே புதல்வி ஆகியோருக்கு அல்லாஹ் சபுரன் ஜமீல் எனும் உயர்ந்த உன்னதமான தாங்கும் சக்தியை அருள்வானாக. அவர் பிரிவால் வாடும் அவர்களின் சகோதரர்கள் அப்துல் ஹமீத் பாகவி, அப்துல் வஹாப், சகோதரிகள் அலவியா, ஃபாத்திமா முஸப்பர் மற்றும் உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள் வானாக. அவருக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் மறுவுலக மேலான பதவியை வழங்கி அருள்வானாக!
அவருடைய மறைவால் ஏற்பட்டுள்ள பேரிழப்பை முஸ்லிம் லீக் இயக்கத்தில் நிரப்பி தருவதற்கு தக்கவர்களை அவருடைய மறைவிற்கு இதயம் நிறைந்த இரங்கலை உரித்தாக்குகிறேன்! இவ்வாறு தலைவர் பேராசிரியர் தனது இரங்கல் செய்தியில் குறிபிப்பிட்டுள்ளார்

Tags: இரங்கல் முஸ்லிம் லீக்

Share this