வீராணம் ஏரிக்கரை சாலை அகலப்படுத்தும் பணி தீவிரம்
நிர்வாகி
0
காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கரை சாலை 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி செப்பணிடும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரிக்கரையில் லால்பேட்டை-சேத்தியாத்தோப்பு வரை உள்ள 16 கிலோ மீட்டரில் கடந்த ஆண்டு 14 கிலோ மீட்டர் சாலை அகலப்படுத்தி புதிய சாலை போடப்பட்டது.
ஏரியின் துவக்க பகுதியான லால்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட இடமானதால் சாலை போடும் பணி அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. தற்போது கடலூர்- நாகை மாவட்டத்தை இணைக்க முட்டத்தில் பாலம் கட்ட அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து சென்னை முதல் காட்டுமன்னார்கோவில் வழியாக மயிலாடுதுறை வரை ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலை விரிவுபடுத்தும் பணி நடைபெற்று வருகின்றன.இதில் காட்டுமன்னார் கோவில் முதல் முட்டம் வரை சாலை விரிவுபடுத்தி போடப்பட்டுள்ளது.
தற்போது லால் பேட்டை பேரூராட்சி பகுதியான வீராணம் ஏரிக்கரை சாலை 2 கிலோ மீட்டர் தூரம் அகலப்படுத்தும் பணி 1 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவில் விரைவாக நடைபெற்று வருகின்றன. இப்பணியினை பொதுப்பணி துறை உதவி செயற்பொறியாளர் சந்தோஷ்குமார் பார்வையிட்டார்.

Tags: சாலை லால்பேட்டை வீராணம்