Breaking News

மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க தவறிய இந்தியா-சர்வதேச மத சுதந்திரத்துக்கான கமிஷன் குற்றச்சாட்டு!»

நிர்வாகி
0
சர்வதேச மதசுதந்திரத்திற்கான அமெரிக்கக் கமிஷன் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டுக்கான கண்காணிப்பு பட்டியலில் இந்தியா இருப்பதாகவும், இந்தியாவில் பலமாநிலங்களில் மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க இந்திய அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியதோடு, அதற்கு சான்றாக ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தில் 40 பேர் கொல்லப்பட்டதையும்- குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் ஏராளமாக கொல்லப்பட்ட முஸ்லிம்களையும் இந்த கமிஷன் மேற்கோள்காட்டி இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து சிறுபான்மையினரை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக கூறியிருப்பதோடு, இதுபற்றி விவாதிக்க இந்தியா வருகைதர இக்கமிஷனுக்கு இந்திய அரசு அனுமதியளிக்கவேண்டும் என்று கோரியுள்ளது.
சர்வதேச மத சுதந்துக்கான கமிஷனின் மேற்கண்ட அறிக்கை முழுக்க முழுக்க உண்மையாகும்.வரவேற்கத்தக்கதாகும். சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்களின் உயிர்-உடமைகள் தீவிரவாதிகளால் பறிக்கப்படும்போது அந்த தீவிரவாதிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டிய மத்திய-மாநில அரசுகள் 'மாற்றான் தாய் மனப்பான்மையோடு'தான் நடந்துவருகின்றன என்பதற்கு மும்பை-குஜராத்-கோவை போன்ற பகுதிகளின் முஸ்லிம்கள் சிந்திய ரத்தம் சான்று பகர்ந்து வருகின்றது. அதே நேரத்தில், இந்தியாவில் மத சிறுபான்மையினரின் உரிமை பரிக்கபடுவதாக கூறும் இக்கமிஷன், அமெரிக்காவால் ஜப்பான் ஹிரோஷிமா தொடங்கி ஆப்கானிஸ்தான் வரை பறிக்கப்பட்ட மனித உரிமைகளை கண்டுகொள்ளாதது ஏன்? அதுமட்டுமன்றி, பாலஸ்தீனர்களின் பூமியில் அமர்ந்துகொண்டு பாலஸ்தீனர்களின் உதிரம் குடித்துவரும் இஸ்ரேலிய மனித உரிமை மீறல்களை கண்டு கொள்ளாதது ஏன்?
ஆக, இக்கமிஷனின் நோக்கம் ஒருபுறம் மத சிறுபான்மையினர் உரிமைகளை பாதுக்காக்க குரல் எழுப்புவதுபோல் தோற்றமளித்தாலும், மறுபுறம் அமெரிக்க- இஸ்ரேலிய மனித உரிமை மீறல்களை உலகத்தின் பார்வையிலிருந்து மறைக்கும் என்னமோ என்ற அச்சம் நடுநிலையாளர்களின் உள்ளத்தில் எழாமல் இல்லை. மேலும் இதுபோன்ற கமிஷன்கள் சுட்டிக்காட்டுவதால் இந்தியாவில் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை. காரணம் இதற்கு முன்பாக 'அம்னெஸ்டி இன்டெர் நேஷனல்' போன்ற அமைப்புகள் இதுபோன்று பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நன்றி : நிழல்களும்-நிஜங்களும்

Share this