Breaking News

இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா காரணம் அல்ல--பா.ஜனதா தலைவர் ஜஸ்வந்த் சிங்!

நிர்வாகி
0
இந்தியாவை ஆட்சி செய்த வெள்ளையர்கள் சுதந்திரம் அளித்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்று 2 நாடுகளாக உருவானது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தனிநாடாக உருவாகவும், நாட்டின் பிரிவினைக்கு அவரே காரணமாக இருந்தார் என்று முஸ்லீக் தலைவர் முகமது அலி ஜின்னாவைக் கூறுவார்கள்.

இது குறித்து, பா.ஜனதா கட்சியின் முன்னாள் வெளியுறவு மந்திரியும், மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜஸ்வந்த் சிங் ஜின்னா-இந்தியா: பார்ட்டிசன், இன்டிபென்டன்ஸ் என்ற 674 பக்க சுயசரிதையை எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தின் வெளியீடு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடக்கிறது.

இந்த புத்தகத்தில், ஜஸ்வந்த் சிங், இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முகமது அலி ஜின்னா காரணம் அல்ல என்று அவரை புகழ்ந்தும் நேருவே இந்தியா உடைய காரணமாக இருந்தார் என குற்றம் சாட்டியும் உள்ளார்.நேரு விரும்பிய இந்தியாசர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த புத்தகம் குறித்து, ஜஸ்வந்த் சிங் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேரு, உயர் அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி ஒருங்கிணைந்த இந்தியாவில் அமையவேண்டும் என்று விரும்பினார். அதுதான் அவர் விரும்பிய இந்தியாவாகவும் இருந்தது.

ஆனால் முகமது அலி ஜின்னா, கூட்டு அதிகார ஆட்சி முறையை விரும்பினார். அதை மகாத்மா காந்தியும் கூட ஏற்றுக் கொண்டார். ஆனால் நேருவுக்கு இதில் உடன்பாடு கிடையாது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை நடக்கும் 1947ம் ஆண்டு வரை நேரு இதே நிலையைத்தான் கொண்டிருந்தார்.அப்போது காங்கிரஸ் மட்டும் கூட்டு அதிகாரப் பகிர்வு கொண்ட ஆட்சி முறைக்கு ஒப்புக் கொண்டிருந்தால் ஒருங்கிணைந்த இந்தியா என்ற நிலையை நாம் அடைந்திருப்போம்.

ஆனால் ஜவகர்லால் நேரு அதிக அதிகாரம் கொண்ட மத்திய ஆட்சி முறையை விரும்பியதால்தான் பிரச்சினையே ஏற்பட்டது.நேருவுக்கு பதிலாக, மகாத்மா காந்தி, ராஜாஜி அல்லது ஆசாத் ஆகியோர் இது குறித்து இறுதி முடிவை எடுத்திருந்தால் நிச்சயம் ஒருங்கிணைந்த இந்தியாவை நாம் அடைந்திருப்போம் என்றே நான் நம்புகிறேன்.வெறுப்பு கிடையாதுமுகமது அலி ஜின்னாவுக்கு இந்துக்கள் மீது வெறுப்பு கிடையாது. அப்படி நினைப்பது முற்றிலும் தவறானது. அவருக்கு காங்கிரசின் கொள்கைகளில்தான் கருத்து வேறுபாடு இருந்தது. மற்றபடி இந்துக்கள் மீது அவர் வெறுப்பு கொண்டிருக்கவில்லை.

எனவே, பிரிவினையை ஏற்படுத்திய வில்லனாக முகமது அலி ஜின்னாவை கருதக் கூடாது. தவிர, பிரிவினைக்கான முதன்மையான காரண கர்த்தாவும் அவர் அல்ல.மேற்கண்டவாறு ஜஸ்வந்த் சிங் கூறினார்.

இந்தியா&பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜவகர்லால் நேருவும், காங்கிரசும்தான் முக்கிய காரணம் என்று ஜஸ்வந்த் சிங் கூறியிருப்பதால் புதிய அரசியல் சர்ச்சை உருவாகி இருக்கிறது.
நன்றி;தினத்தந்தி

Share this