Breaking News

விசாரணை சிறைவாசிகளை விடுதலை செய்!

நிர்வாகி
0
ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளான செப்டம் பர் 15ஆம் தேதி அன்று 7 வருடம் தண்டனையை அனுபவித்த ஆயுள் தண்டனை சிறைவாசிகளை தமிழக அரசு பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்து வருகிறது. ஆனால் ஏழு வருடம் முடித்த சிறைக் கைதி களின் பட்டியலில் மதக் கலவர வழக்குகளில் சம்பந்தப்பட்ட தாகக் கூறி முஸ்லிம் கைதிகள் விடுதலையாவதை அரசு தடுத்து வருகிறது. மேலும் விசாரணை என்ற பெயரில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்வாடி வரக்கூடிய கைதிகள் தமிழக சிறைகளில் பலர் உள்ளனர். குணங்குடி அனிபா, தடா ரஹீம் போன்ற வர்கள் விசாரணைக் கைதிகளாகவே சுமார் 11 வருடங்களாக சிறையில் வாடி வருகின்றனர். இவர்களின் மீதான வழக்கே முடியும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் களுக்கு எதிராக எந்த சாட்சியங் களும் இல்லாத சூழ்நிலையிலும் இவர்கள் இதுவரை விடுதலை செய்யப் படாதது நீதித்துறைக்கு பெரும் களங்கமாகும்.
இந்நிலையில் வரும் அண்ணா பிறந்த நாளன்று ஏழு ஆண்டுகள் தண்டனை முடிந்த ஆயுள் சிறைவாசிகள் லி அவர்கள் எக்குற்றத்தைப் புரிந்திருந் தாலும் பாரபட்சமின்றி அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், ஆயுள் தண்டனை பெறாத மற்ற சிறை யாளிகளுக்கு தண்டனை குறைப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும், ஓராண்டுக்கு மேல் சிறையில் உள்ள விசாரணை சிறைவாசிகளை பிணையில் விடுதலை செய்ய உரிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் மிகப் பெரும் பேரணி

காலை 11 மணியளவில் மன்றோ சிறையி­ருந்து புறப்பட்ட இப்பேர ணியை பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல் லாஹ் துவக்கி வைத்தார். இப்பேரணி யில் நூற்றுக்கணக்கான மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். தமுமுக மற்றும் ம.ம.க.வினர் பெருளவில் பங்குகொண்டது குறிப் பிடத் தக்கது. கோஷங்களை எழுப்பிய படி கைகளில் கோரிக்கை வாசகங்கள் எழுதிய அட்டைகளோடு நீண்ட வரிசையில் சென்ற பேரணியை தமிழ மக்கள் உரிமை கழக ஒருங்கிணைப்பு செயலாளர் வழக்கறிஞர் புகழேந்தி தலைமை ஏற்று நடத்திச் சென்றார். அவருடன் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பேராசிரியர் கல்யாணி, தோழர் தியாகு, தோழர் பாவேந்தன், தோழர் வடிவு, தோழர் சங்கர் ஆகியோர் முன்வரிசையில் முழக்க மிட்டபடி பேரணியை வழிநடத்திச் சென்றனர்.
பேரணியின் பின்வரிசையில் பெண் ளும் அணிவகுக்க தேசிய லீக் இனாயத்துல்லாஹ், அக்ரம்கான் ஆகியோர் கோஷ மிட்டபடியே வந்தனர். பேரணியில் வந்தவர்கள் விசா ரணை சிறைவாசிகள் குணங்குடி அனிபா, தடா ரஹீம் ஆகியோரை விடுதலை செய்! 17 ஆண்டுகளாய் சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்! என முழக்கமிட்டனர்.



பேரணி கட்டுக்கோப்பாக போக்குவரத்துக்கு எந்த இடை யூறும் இன்றி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையை வந்தடைந்தது. அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடையில் தலைவர்கள் உரையாற்றினர். பேரா. கல்யாணி பேசும்போது கைதிகளைப் பார்க்க சிறையில் வரும் உறவினர்கள் அவர்களுடன் பேசுவதற்கு படும் கஷ்டங்களை விவரித்தார். கைதிகளுக்கான ரேஷன் பொருட்களில் நடைபெறும் ஊழல்களையும் எடுத்துச் சொல்லி தலித்துகளும், முஸ்­ம்களும் சிறையில் படும் துயரங்களை விவரித்தார். தோழர் தியாகு பேசும்போது, மும்பை குண்டுவெடிப்பு போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டதாகக் கூறி முஸ்­ம் களுக்கு வழக்குகளை விரைந்து நடத்தி மரண தண்டனை அளிக்கப்படுகிறது. ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்தவர்கள், முஸ்லிம்களுக்கு எதிரான கலவரங்களை நடத்தியவர்களுக்கு என்ன தண்டனை? என கேள்வி எழுப்பினார். சிறைவாசிகள் படும் துயரங்களை சிறை சென்ற தனது அனுபவத்தோடு எடுத்துரைத்தவர், 8 வருடங்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் மனரீதியாகவே சிறைவாசி கள் பாதிக்கப்படுவதை உணர்ந்து குற்றப்பிரிவுகளை பாராது, அவர்கள் 7 வருடம் சிறைத் தண்டனை அனுபவித்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார். இறுதியாகப் பேசிய தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேரணியின் நோக்கங்களை எடுத்துரைத்து அரசு அவற்றை வரும் அண்ணா பிறந்த நாளன்று நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் அடுத்தக் கட்ட போராட்டம் தொடரும் என எச்சரித்தார். (பேராசிரியரின் உரை தலையங்கமாக) இறுதியாக நன்றியுரைக் குப் பின் கூட்டம் எழுச்சியோடு முடிவுற்றது. தலைநகரில் நடந்த பேரணி மனித உரிமை ஆர்வாளர்களின் மீடியா மற்றும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்ததைப் போல் அரசின் கவனத்தை யும் ஈர்த்திருக்கும். மனித உரிமை ஆர்வலர்களின் நியாய மான கோரிக் கையை அரசு ஏற்குமா?








Tags: விடுதலை

Share this