Breaking News

10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்க!

நிர்வாகி
0
தமிழக சிறைகளில் 10 ஆண்டு களுக்கும் மேலாக இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்ய வேண்டும் என கோரி பின்வரும் கோரிக்கை மனுவை தமிழக முதல் வருக்கு தமுமுக தலைவர் பேராசிரி யர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடிதம் அன்று அனுப்பியுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு,
கடந்த நான்கு ஆண்டுகளாக பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை முன் விடுதலை செய்யும் இந்தியாவுக்கே முன்மாதிரியான ஒரு மனிதாபிமான திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத் திற்கு எங்கள் முழுமையாக ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
எனினும் இத்திட்டத்தின் கீழ் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகள் பயனடைய முடியாத நிலை உள்ளது என்பதை வருத்தத்துடன் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். மதக்கலவர வழக்குகள் வெடி பொருள் தடைச் சட்டம் ஆகிய வழக்குப் பிரிவுகளை காரணம் காட்டி ((G.O.M.S.No.1155(Home (Prison) Department) தகுதியான பல முஸ்லிம் ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை பெற தடை விதிக்கப் படுகிறது. 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து விட்டாலே விடுதலை என்ற சூழ்நிலையில் மேற்கண்ட அரசாணை யால் 10 ஆண்டுகள் தண்டனை முடித்த முஸ்லிம் சிறைவாசிகள் பலர் விடுதலை செய்யப்படாமல் வாடி வருகின்றனர்.
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுத தடை சட்டம், வெடி மருந்து சட்டம் ஆகிய வழக்குகள் அல்லாமல் வெறும் சதிக் குற்றச்சாட்டு சாட்டப்பட்ட கைதிகளுக்கு (120b I.P.C) கூட மத சம்பந்தமான குற்றம் என்ற அடிப்படை யில் விடுதலை மறுக்கப்படுவது மனிதாபிமானமற்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஏ. தாஜுத்தீன், எஸ்.ஏ. பாஷா ஆகியோர் இவ்வாறு 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். முஹம்மது அலி என்பவர் மீது எவ்வித குற்றச்சாட்டும் இன்றி 10 ஆண்டுகளாக சிறையில் இருப்பதையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
இதுதவிர விசாரணை சிறைவாசிகளாகவே குணங்குடி அனீபா, அப்துல் ரஹீம், ஏர்வாடி காசிம், கோவை முபாரக், மதுரை ராஜா உசேன் ஆகியோர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பிணையின்றி சிறையில் இருப்பதை தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். இதில் குணங்குடி அனீபா அப்துல் ரஹீம் ஆகியோருக்கு எதிரான வழக்கில் எவ்வித சாட்சிகளும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாத போதும் தொடர்ந்து பிணை மறுக்கப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முஸ்லிம் சிறைக்கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கை அனைத்து முஸ்­ம் அமைப்புகள், அரசியல் கட்சிகள், மனித உரிமை அமைப்புகளின் கோரிக்கையாக தொடர்ந்து வைக்கப்பட்டு வரும் நிலையில் சில முக்கியத்துவமற்ற சட்டப் பிரச்சனைகளை முன்வைத்து அவர் களின் விடுதலைக்கு தடை விதிக்கப் படுகிறது.
ஆயுத தடைச் சட்டம், வெடிபொருள் சட்டம், மதக் கலவர வழக்கு ஆகிய பிரிவுகளில் தண்டனை பெற்றவர்களை பொது மன்னிப்பில் விடுதலை செய்யக் கூடாது என்ற வாதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பதை தங்களது கவனத்துக்கு கொண்டு வருகிறோம். மஹேந்தர் சிங் எதிர் ஹரியானா மாநிலம் (Sc30.07.2005) என்ற வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.பி.சின்ஹா மற்றும் எச்.எஸ்.பேடி ஆகியோர் கைதிகள் தண்டனை குறைப்பு விஷயத்தில் மாநில அரசுகள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கொடுக்கப்பட்ட அதிகாரத்தை சட்ட ரீதியான அதிகாரமாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த சட்ட அதிகாரத்தின் படி கைதிகள் அனைவரையும் சமமாகத்தான் நடத்த வேண்டும் இதில் பாரபட்சம் காட்டக்கூடாது. தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே முன் விடுதலை கோர எல்லா கைதிகளுக்கும் சமமான உரிமை உள்ளது. இதில் கைதிகளுக் கிடையே பாரபட்சம் காட்டுவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது ஆகும் என தீர்ப்பளித்துள்ளனர். (செய்தி: தமிழ் முரசு நாள்: 05.11.2007) உச்சநீதி மன்றத்தின் இந்த தீர்ப்பு முஸ்லிம் கைதிகள் விஷயத்தில் அப்பட்டமாக மீறப்படுகிறது என்பதை தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
மேலும் சமூக நல்லிணக்கம் கருதி தங்கள் அரசு தென்மாவட்ட சாதிகலவர வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற்றது. இவ்வழக்குகள் எதிலும் கைது நடவடிக்கைகளோ நெடுங்கால சிறை வாசமோ எதுவும் இல்லை. மேலும் வெடி பொருள் வழக்கு ஆயுத தடைச் சட்டங்களின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் எல்லாம் சாதி கலவர வழக்குகளில் இருந்தும் அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டுள்ளது என்பதையும் சாதிக் கலவர வழக்குகளில் காட்டிய மனிதாபிமானத்தை முஸ்­ம் கைதிகள் விஷயத்தில் காட்ட மறுக்கப்படுவதையும் தங்கள் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
அடுத்ததாக மேல்முறையீடு செய் துள்ள கைதிகள் பொது மன்னிப்பு பெற தகுதியற்றவர்கள் என்ற தேவையற்ற வாதம் கிளப்பப்படுகிறது. மேல்முறையீடு செய்துள்ள கைதிகள் பொது மன்னிப்பு பெற தகுதியற்றவர்கள் என்று எந்த சட்டமும் நீதிமன்ற தீர்ப்புகளும் கூற வில்லை என்பதோடு கடந்த 2006, 2007, 2008 ஆண்டுகளில் அண்ணா பிறந்த நாளில் விடுவிக்கப்பட்ட கைதிகளில் பெரும் பாளனோர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வழக்கு நிலுவையில் இருக்கும் போதே விடுதலை செய்யப்பட்டவர்கள் என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டு வருகிறோம்.
எனவே தாங்கள் கருணை உள்ளத் தோடு வரும் அண்ணா பிறந்த நாளன்று பாரபட்சத்திற்கு வழிவகுக்கும் மேற் சொன்ன அரசாணையை G.O.M.S. 1155 Home (Prison) Department) ரத்து செய்து மற்ற ஆயுள் கைதிகளின் விடுதலை யோடு முஸ்லிம் ஆயுள் கைதிகளும் எவ்வித பாரபட்சமும் இல்லாமல் விடுதலை செய்யப்படவும், விசாரணை சிறைவாசிகளாக வாடி வருவோர் உடனடியாக பிணையில் வெளிவரவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென அன்புடன் கோருகிறோம்.
இந்த முஸ்லிம் கைதிகளின் விடுதலை அக்குடும்பத்தாருக்கும் முஸ்லிம் சிறு பான்மை சமுதாயத்துக்கும் ரமலான் பரிசாக அமையும் என்றும் இக்கோரிக் கையை கனிவோடு பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி: தமுமுக

Tags: சிறை தமுமுக முஸ்லிம்

Share this