உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7ம் தேதி இடைத்தேர்தல்
நிர்வாகி
0
கடலூர்: மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது.விருத்தாசலம் நகராட்சி 25வது வார்டு, அண்ணாமலை நகர் பேரூராட்சி 3வது வார்டு, குறிஞ்சிப் பாடி பேரூராட்சி 18-வது வார்டு, லால்பேட்டை பேரூராட்சி 3வது வார்டு, மங்களூர் ஒன்றியத்தில் 14, 21வது வார்டுகள், ஐவதங்குடி, சிலம்பிமங்கலம், எருமனூர் ஊராட்சிகளுக்கு தலைவர் மற்றும் பல்வேறு ஊராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிகளுக் கான இடைத் தேர்தல் வரும் 7ம் தேதி நடக்கிறது.இதற்கான வேட்பு மனுக்கள் இன்று முதல் வரும் 23ம் தேதி வரை பெறப்படும். 24ம் தேதி மனுக்கள் பரிசீலனையும், 26ம் தேதி இறுதி பட்டியல் வெளியிடப்படும். வரும் 7ம் தேதி ஓட்டு பதிவு நடைபெறும். வரும் 9ம் தேதி ஓட்டுகள் எண்ணி முடிவுகள்அறிவிக்கப்படும்.