Breaking News

சுவர்க்கத்தின் சோலைவனமான புனித ரவ்ளா ஷரீபில்...!

நிர்வாகி
0
சுவர்க்கத்தின் சோலைவனமான புனித ரவ்ளா ஷரீபில்...!

வல்ல அல்லாஹ்வின் அருள் பூத்துக் குலுங்கும் ரமளானில் புனித மக்கா முகர்ரமாவிலும் ,மாண்புமிகு மதீனா முனவ்வராவிலும் நல் அமல்கள் செய்து வல்ல ரஹ்மானின் அழகிய பொருத்தம் பெறவேண்டும் என்பதற்க்காக ,புனித ரமளான் தொடங்குவதற்க்கும் மூன்று தினங்களுக்கு முன்பே சென்று புனித ரமளானில் உம்ராவை நிறைவேற்றிமகிழ்ந்தோம்.அல்ஹம்துலில்லாஹ்.

மாண்புமிகு மதீனாவில் வள்ளல் நபிகள் பெருமானார் அவர்களின் தர்பாரில் ஸலாம் சொல்லி,சொல்லி மகிழ்ந்தோம்.சுவர்க்கத்தின் சோலைவனமான புனித ரவ்ளா ஷரீபில் வல்ல அல்லாஹ்வை தொழுது அழுது துஆச் செய்தோம்,பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் இப்புனித இடங்கள் அனைத்திலும் அனைவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படவும்,ஈமான் சலாமத்துக்கும் அனைவர்களின் வளமான செழிப்பான நல்வாழ்வுக்கும்,சமுதாய ஒற்றுமைக்கும் கருணையுள்ள அல்லாஹ்விடம் கரமேந்தி பிரார்த்தித்தோம்.


இஸ்லாத்திற்க்கு மிகப் பெரிய வெற்றியை வழங்கிய பத்ர் போர் நடைப் பெற்ற இடத்திற்க்குச் சென்றோம்,அப்போரில் வீரமரணம் அடைந்த பதினான்கு ஷுஹதாக்களுக்கு ஸத்திய ஸஹாபாக்களுக்கு ஸலாம் சொல்லி மகிழ்ந்தோம்.இஸ்லாத்தை அழிப்பதற்க்கு பெரும் படை திரட்டி ஆணவத்துடன் போர் புரிய வந்த அபூஜஹல்,உத்பா,ஷைபா,வலித் போன்ற ஆணவக்காரர்கள் வீழ்ந்து போன இப்போரில்,

யா அல்லாஹ்!இஸ்லாத்தை அழிப்பதற்க்காக படைதிரட்டி வந்துள்ள இப்பகைவர்களிடமிருந்து இஸ்லாத்தை பாதுகாப்பாயாக! இஸ்லாத்திற்க்கு மகத்தான வெற்றியை வழங்குவாயாக! என வல்லல் நபிகள் பெருமானார் ரசூல் கறீம் (ஸல்) அவர்கள் துஆச் செய்தார்களே அத்தகைய சரித்திரம் படைத்த தியாக சீலர்களின் பூமியில் துஆச் செய்தோம்.

ராமநாதபுரம் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைச் செயளாலரும்,ஃபாத்திமா கனி ஹஜ் சர்வீஸ் நிருவனறுமான அப்துல் அஜீஸ் ஹாஜியாரும்,தமிழகத்துச் சகோதரர்களும் இப்புனித இடத்தை கண்ட போதும் பத்ர் போரின் வீர சரித்திரமும்,வீரச் செய்திகளும் நம் கண் முன்னே நின்றது.பத்ரின் வெற்றி வரலாறோடு பத்ர் ஷுஹதாக்களின் வெற்றிச் செய்தியை நேரில் கண்டு மகிழ்ந்து நெஞ்சம் நெகிழ்ந்து சென்னை பட்டணம் திரும்பியதும்,சென்னை விமான நிலையத்தில் இனிப்பான ச் செய்தியை சொன்னார்கள்,

சமுதாயத் தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத்,அனைத்துலக காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் வெற்றிச் செல்வர் அப்துல் ரஹ்மான் எம்.பி, மாநில பொதுச் செயளாலர் அபூபக்கர்,மாநில கொள்கை பரப்புச் செயளாலர் காயல் மகபூப் உள்ளிட்ட நிர்வாகிகள்.,முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்களை இன்று சந்தித்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று கோரிகை வைத்துள்ளார்கள் என்று சொன்ன செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது.

அத்தோடு தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸாமத் சாஹிப் அவர்களின் பிறந்த தின விழாவை சமூக நல்லிணக்க விழாவாக நடைபெறுகிறது அவ்விழாவில் கலந்துக் கொள்ள டாக்டர் கலைஞர் அவர்களை அழைத்துள்ளார்கள் .கலைஞர் அவர்களும் கலந்துக் கொள்ள ஒப்புதல் வழங்கியுள்ளார்கள் என்றச் செய்தியையும் என் புதல்வர்கள் சொன்னதும் மகிழ்ந்து போனேன்.


நாங்கள் மக்காவில் உம்ரா செய்து கொண்டிருந்தபோது சந்தனத் தலைவர் சமுதாயத் தலைவர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களின் அன்பு மகனார் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் முன்னோடி அப்துல் ஹக்கீம் அவர்களின் தாருல் பகாச் சென்றார்கள் என்ற தகவலையும் தெரிந்து பெரும் கவலை அடைந்தேன்.அவரின் அரசியல்,சமுதாய,மணிச்சுடர் இந்த சேவைகள் என் கண்முன்னே நின்றது,அவரின் மருமை வாழ்வின் உயர்வுக்காகவும் புனித கஃபத்துல்லாஹ்வில் தவாஃப் செய்து, துஆச் செய்தேன்.நம் அனைவர்களது சேவைகள்,நல் அமல்கள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் கபூலாக்குவானாக!
மவ்லவி தளபதி,ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
மாநில மார்க்க அணிச் செயளாலர்.

Tags: தளபதி முஸ்லிம் லீக் லால்பேட்டை

Share this