லால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் துவக்க விழா!!
லால்பேட்டை . காம்
0
லால்பேட்டை அரசினர் மேல் நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்டம் துவக்க விழா நிகழ்ச்சி காட்டுமன்னார்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலமை ஆசிரியர் தலமையில் நடைபெற்றது.
லால்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் ஏ.ஆர்.சபியுல்லாஹ் துவக்கி வைத்தார்.முஸ்லிம் லீக் மாநில செயளாலர் தளபதி.ஏ.ஷஃபீகுர் ரஹ்மான்,பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஹாஜா மைதீன்,இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாலர் எஸ்.ஹாரிஸ் அஹமது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
காட்டுமன்னர்குடி அரசினர் மேல்நிலைப் பள்ளையின் பெற்றோர் ஆச்சிரியர் கழக தலைவர் திரு கண்ணன் பிள்ளை சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் எஸ்.ஏ.அப்துல் அஹது,எம்.ஓ.அப்துல் அலி,மவ்லவி முஹம்மது தாஹா உள்ளிட்ட ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டனர்.முடிவில் லால்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலமை ஆசிரியர் நன்றி கூறினார் .
Tags: அரசினர் மேல் நிலைப் பள்ளி லால்பேட்டை