Breaking News

முஸ்லிம் லீக் பாரம்பரியம் திரும்புகிறது சமுதாயம் அதைத்தான் விரும்புகிறது - கே.எம்.கே

நிர்வாகி
0
முஸ்லிம் லீக் பாரம்பரியம் திரும்புகிறது சமுதாயம் அதைத்தான் விரும்புகிறது - கே.எம்.கே

தான் பெற்ற இன்பம் இந்தத் தரணியும் பெற வேண்டும் என்னும் உன்னத இலட்சியத்தைக் கொண்டது ரமளான் நோன்பு - அதன் இறுதியில் கொண்டாடப் பெறும் ஈத்துவக்கும் திருநாளாம் பெருநாள்!
மனம் மகிழ்ந்து வீட்டிலும் நாட்டிலும் மக்கள் மத்தியில் மனமகிழ்வு ஏற்பட ஈதுப் பெருநாளில் எல்லோரும் பிரார்த்தித்தோம். அந்த வேட்டலுக்கு ஆண்டவனின் அங்கீகரிப்பும் விரைவில் வர வேண்டும்@ அனைவருக்கும் இன்பம் தர வேண்டும் என்று மீண்டும் அவனையே வேண்டுவோம்.
இந்த ஈதுப் பெருநாளில் பழைய கால வரலாறு திரும்பியது போன்ற நற்செய்தி பல ஊர்களில் இருந்தும் நகரங்களில் இருந்தும் வந்தது@ இது இதயத்துக்குப் பெருமகிழ்ச்சியைத் தந்தது!
சுதந்திரத்துக்கு முன்னுள்ள நாட்களில் இந்திய முஸ்லிம்கள் - குறிப்பாகத் தமிழக முஸ்லிம்கள் ஈதுப் பெருநாள் தொழுகைக்குப் பள்ளிக்கோ, அந்தந்த மஹல்லா ஜமாஅத் தலைவர்கள் ஃ நாட்டாண்மைகள் முன்னிற்க, சங்கைமிகுந்த ஆலிம்கள் ஃ மௌலானா மௌலவிகள் துஆ ஓத, பச்சிளம் பிறைக்கொடியை தக்பீர் முழக்கத்துடன் ஒவ்வொரு பகுதியிலும் ஏற்றுவர். முஸ்லிம் லீகைப் போற்றுவர். இந்தப் பழைய மரபும் - பழக்கமும் இந்த ஈதுப் பெருநாளில் பல ஊர்களிலும் நகரங்களிலும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது! மஹல்லா ஜமாஅத்தார், நட்சத்திரம் பொறித்த பச்சிளம் பிறைக் கொடியை ஏற்றி வைப்பதில் பெருமளவில் பங்கேற்றுச் சிறப்பித்திருக்கிறார்கள்.
முஸ்லிம் லீகின் பழைய பாரம்பரியம் திரும்புகிறது. அதை இன்றைக்கு சமுதாயம் முழுவதும் விரும்புகிறது என்பது தௌ;ளத் தெளிவாகத் தெரிகிறது. முஸ்லிம் லீகிற்கு எதிராக இருப்போருக்கும் இது அப்பட்டமாகப் புரிகிறது.
2009 அவற்றில் இனி வருங்காலத்தில் ஒவ்வொரு ஈதுப் பெரு நாளிலும் கொடி ஏற்றும் மகிழ்ச்சி தொடர வேண்டும்! அதற்கு அந்தந்த பகுதி முஸ்லிம் லீகர்களின் தொண்டும் பணியும் துணை நிற்க வேண்டும்!
இந்த ஆண்டு எந்தெந்த ஊர்களில் இந்த கொடியேற்றம் நிகழவில்லையோ, அங்கெல்லாம் வரும் ஆண்டுகளில் சிறப்பான முறையில் அந்த நிகழ்ச்சி எல்லோருடைய ஒத்துழைப்போடு நடைபெற வேண்டும்!
தமிழகத்தில் உள்ள பதினோராயிரம் மஹல்லா ஜமாஅத்துகளிலும் - அந்தந்த பள்ளிவாசல் அருகிலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் கொடி பறக்கும் நாள்தான் சமுதாயத்துக்குப் பொன்னாள் ஆகும்!
அது நிகழும் அன்று உலகிற்கே ஒன்றைச் சொல்ல முடியும்!
சிறுபான்மை முஸ்லிம் சமுதாயம் அரசியல்ரீதியில் ஒறுபட்டு விழித்து எழுந்து விட்டது! விழுந்து கிடப்போரை எழுந்து நடக்கச் செய்ய முடியும்! விழித் தோரை வெற்றியாளர்களாக ஆக்க முடியும்! ஒற்றுமையின் வலிமையை - அதன் வெற்றி வரலாற்றை உலகுணரச் செய்ய முடியும்!
இப்படிச் சொல்லவும் முடியும்! அனைத்து உரிமைகளையும் வெல்லவும் முடியும்!
ஆகவேதான், தொடர்ந்து தூண்டி வருகிறோம்! பத்து இலட்சம் உறுப்பினர் சேர்ப்பு என்னும் இலக்கை விரைவில் எட்டுவோம்! சமுதாயக் கோட்டையை வலிமையான அடித் தளத்தில் கட்டுவோம்! வாருங்கள் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகில் சேருங்கள்! என்று அழைக்கிறோம்!
இந்த அழைப்பு யாருடைய சொந்தப் பிழைப்புக்காக அல்ல!
இந்த அழைப்பு யாருடைய சொந்த தலைமைக்காக அல்ல!
இந்த அழைப்பு யாருடைய சொந்த நலனுக்காகவும் அல்ல!
இது சமுதாயத்தின் இதயக்குரல்! சத்தியத்தின் எழுச்சிக் குரல்! புகழ்மேவிய சரித்திரத்தின் வெற்றிக்குரல்!
கேட்சிறதா? அன்புகொண்டோரே, இந்தக் குரல் உங்கள் இதயங்களில் ஒலிக்கிறதா?
இலங்கையைச் சேர்ந்த ஆத்மீக ஞானி எம்.எஸ்.எம். அப்துல்லாஹ் அவர்கள் எழுதியுள்ள ஏகத்துவப் பாடல்கள் என்னும் கவிதை நூலை சென்னை மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்டிருக்கிறது. அது என் கவனத்திற்கு வந்ததும் புரட்டினேன்! இதோ, இந்தப் பாடல், என் கண்ணில் பட்டது! என் கல்பை தொட்டது!
சமூகத்தில் பிணக்கின்றிச் சகலரும் வாழ்ந்திடச் சன்மார்க்கச் சட்டம் வேண்டும் சட்டத்தை மீறிடும் கொட்டத்தை யடக்கிடச் சரியான தலைவன் வேண்டும் சத்திய வழியினில் சறுக்கிடாது ஏகிடச்சரியான விளக்கம் வேண்டும்சற்குணம் குடிகொண்ட மனிதனாய் மாறிடச் சரியான உறுதி வேண்டும்!
ஆமாம்! இந்தச் சரியான உறுதி வேண்டும்! இது எல்லோருக்கும் தெரியவும் வேண்டும்!
சரியான பாதையில் செல்வோம்! வெல்வோம்!

Tags: கட்டுரை கே.எம்.கே முஸ்லிம் லீக்

Share this