Breaking News

ஒபாமாவின் ரமலான் வாழ்த்து

நிர்வாகி
0
ஆப்கானிஸ்தானிலும் பாகிஸ்தானிலும் எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வேண்டுமாம்!
புனித ரமலான் மாதத்தினையொட்டி உலகம் முழுவதும் வாழும் முஸ்லிம் களுக்கு அதிபர் ஒபாமா வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருக்கிறார்.
ஒபாமாவின் ரமலான் வாழ்த்து வீடியோ காட்சியாக வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் மட்டு மல்லாது உர்தூ, ஹிந்தி, வங்காளி, பஞ்சாபி உள்பட பல்வேறு மொழிகளில் வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார்.
ரமலான் நோன்பு காலத்திய சடங்கு கள், இஸ்லாமிய, கிறித்தவ மதங்களின் அடிப்படைக் கொள்கைகளின் பொதுத் தன்மையை நமக்கு நினைவுபடுத்துகிறது. இந்தக் கொள்கைகள் அனைத்து மனித உயிர்களுக்கும் நீதியையும், கண்ணியத் தையும், முன்னேற்றத்தையும் வழங்கு கின்றன என இரு சமயங்களும் பாலம் ஏற்படுத்தும் விதமாக தனது வாழ்த்தினை தெரிவித்திருக்கிறார்.
உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடு களில் உள்ள அமெரிக்க தூதரகங்களை அங்குள்ள முஸ்லிம்களுடன் நல்லுறவு பாலம் அமைக்க ஆவன செய்யுமாறு கேட்டிருக்கிறோம். அதனை நிறைவேற்று வதற்கான களங்களையும் அறிந்திருக் கிறோம். முஸ்லிம்களின் உள்ளங்களில் பொதிந்து கிடப்பவற்றை உணர்ந்து கொண்டோம்.
முஸ்லிம்களின் கருத்துக்களை கவன மாக செவிமடுத்தோம். முஸ்லிம்களின் போராதரவோடு உறுதியான நடவடிக்கை எடுக்கவும் தீர்மானித்துள்ளோம். அந்த நடவடிக்கைகள் பாதுகாப்பு ரீதியிலும், அரசியல் ரீதியிலும் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படும். நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலகை பாதுகாப்பு நிரம்பியதாக மாற்றும்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் என்ற தனித் தனி நாடுகளை உருவாக்கும் விஷயத் தில் நாங்கள் ஆதரவை வழங்கத் தயாராக இருக்கிறோம்.ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானி லும் நாங்கள் எடுக்கும் நடவடிக்கை களுக்கு முழு ஒத்துழைப்பை முஸ்லிம் உலகம் வழங்க வேண்டும் என்றும் ஒபாமா கேட்டுக் கொண்டிருக்கிறார்.
பாதுகாப்பான உலகை உருவாக்கு வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கு சரியான எடுத்துக்காட்டு ஈராக்கில் நிகழ்ந்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வந்தோம். சட்டத்தின் ஆட்சியை உருவாக்குவதில் உறுதி காட்டும் 50 நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் தனது ரமலான் வாழ்த்துக்களை தெரிவித் துக் கொள்வதாகக் கூறும் ஒபாமா, அமெரிக்காவுக்கும் முஸ்லிம் நாடுகளுக் கும் இடையேயான உறவில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்தவும் உலகுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Tags: ரமலான் வாழ்த்துக்கள்

Share this