Breaking News

ராஜசேகர ரெட்டியும்! ஆந்திர முஸ்லிம்களும்!

நிர்வாகி
0
மதரஸாவுக்கு கணினி வழங்கும் நிகழ்ச்சியில் ரெட்டி

ஒரு மாநில முதல்வரின் திடீர் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமே கலங்கி நின்றது இந்திய அரசியல் வரலாற்றில் இதுவே முதல் தடவையாக இருக்கக்கூடும்.
ஒய்.எஸ்.ஆர். என அன்பாக அழைக்கப்படும் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி, ஹெலிகாப்டர் விபத்தில் மறைந்த செய்தி அரசியல் அரங்கை உலுக்கியது.
அவரது நலத்திட்டங்கள் பல மாநில அரசுகளின் நலத்திட்டங்களுக்கு முன்னோடித் திட்டங்களாக அமைந்துள்ளன என்றால் மிகையல்ல.
டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி யின் 'ராஜீவ்காந்தி காப்பீடு திட்டம்' நம் தமிழகத்தில் பிரபலமாக பேசப்படும் 'கலைஞர் காப்பீட்டு திட்டத்திற்கு' முன்னோடித் திட்டமாகும்.
ஆந்திரா என்றால் கடன் தொல்லையால் கொத்து கொத்தாக தற் கொலை செய்யும் விவசாயிகள்தான் நினைவுக்கு வரும். சந்திரபாபு நாயூடுவின் ஆட்சிகால சோகத்தை மாற்றி விவசாயிகளின் வயிற்றில் பால்வார்த்தவர் ஒய்.எஸ்.ஆர்.
ஒய்.எஸ்.ஆரின் அதிரடி அகில இந்திய அளவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஒய்.எஸ்.ஆரின் அரும் முயற்சியால் பாரதீய ஜனதாவின் ஆட்சிக் கனவு தகர்ந்தது. பிரதமர் இருக்கையில் துண்டு போட்டு சீட் பிடிக்கலாம் என கனவில் மிதந்த அத்வானிகளின் கதி அதோகதியாகிப் போனது.
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி தங்களது தயவில்தான் ஆட்சி நடத்த வேண்டும் என பிளாக்மெயில் செய்து மிரட்டியே காரியம் சாதித்துக் கொள்ளலாம் என ஆசைப்பட்டவர்களின் கனவில் வண்டி வண்டியாக மண் அள்ளிப் போட்டவர் டாக்டர் ஒய். ராஜசேகர ரெட்டி.
2009 நாடாளுமன்றத் தேர்தலில் 33 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி வாகை சூடி மதவாத கும்பலின் ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியிருந்தார். காங்ரஸின் வெற்றிக்கு ஆந்திரா கைகொடுத்தது.
டாக்டர் ஒய்.எஸ்.ஆரின் மறைவு நாட்டின் சகல தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒய்.எஸ்.ஆர். சென்ற ஹெலிகாப்டர் விபத்து குறித்து மர்மங்களும், யூகங்களும் புற்றீசல்களாக புறப்பட்ட வண்ணம் உள்ளது. இந்நிலையில் எல்லோருக்கும் இனியவராக வாழ்ந்த ராஜசேகர ரெட்டியின் மறைவு ஆந்திர முஸ்லிம் சகோதரர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீட்டுக்காக போர்க் கோலம் பூண்டவர் டாக்டர் ஒய்.எஸ்.ஆர்.
தான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றியே தீருவேன் என சூளுரைத்தார்.
டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி 2004ல் முதன்முறையாக ஆட்சி பீடத்தைக் கைப்பற்றியபோது முஸ்லிம்களுக்கு, தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டினார்.
ஆந்திராவில் கல்வி, வேலை வாய்ப்பில் முஸ்லிம் களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க உத்தரவு பிறப் பித்தார். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடா? அனுமதிக்க மாட்டோம் என சதிகார கும்பல் சதி வலைகளைப் பின்னியது. நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் ஏறி சூழ்ச்சிகளைத் தொடர்ந்தனர்.
முஸ்லிம்களுக்கு பாடுபடுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல்வாதிகள் முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக் கைகளை நிறைவேற்றுவோம் என பேச்சளவில் முழங்கும் வாய்ச்சொல் வீரர்களை மட்டுமே கண்ட இந்த கள்ளம்கபடமற்ற சமுதாயம் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டுக் காகப் போடப்பட்ட முட்டுக்கட்டைகளை தகர்த்தெரிய வெகுண்டெழுந்த ஒய்.எஸ். ஆரைக் கண்டு வியந்தது.
எதற்கும் கலங்காது தனது முடிவில் உறுதியாக இருந்து முஸ்லிம் இடஒதுக் கீட்டுக்கு எதிராகப் போடப்பட்ட முட்டுக் கட்டைகளையும் சூழ்ச்சிகளையும் எதிர்த்து சட்ட யுத்தம் நடத்தி வெற்றி வாகை சூடினார்.
முஸ்லிம்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டது. செயற் கரிய செயல் செய்த ராஜ சேகர ரெட்டி நாட்டு மக்க ளால் பாராட்டப் பெற்றார்.
ராஜசேகர ரெட்டி யின் ஆற்றலும், எடுத்தக் காரியத்தை எப்பாடுபட் டேனும் நிறைவேற்றும் உறுதியும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்று.
அரசு நிறுவனங்களால், அரசியல் பெரும்புள்ளிகளால் அபகரிக்கப்பட்ட வக்பு நிலங்களை மீட்டு உரிய முறை யில் வாரியத்திடம் ஒப்படைப்பதில் ஒய்.எஸ்.ஆர். பெரிதும் ஆர்வம் காட்டினார்.
அரசு நிறுவனம் ஒன்று 50 ஏக்கர் வக்ஃபு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது. அது ஹஜ்ரத் பாபா ஷர்ஃபுதீன் தர்காவுக்குச் சொந்தமான நிலம். அதன் இன்றைய மதிப்பு 350 கோடியாகும். அதனைத் தயங்காமல் அரசு ஆக்கிரமிப் பிலிருந்து அகற்றி வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைத்தார். இவரைப் போன்ற ஒரு சிறந்த முதல்வரை நாங்கள் எப்போது காணப் போகிறோம் என தேம்புகிறார் ஹைதராபாத்தின் முஸ்லிம் பிரமுகர் மவ்லவி ஆகில் காசிமி.
முஸ்லிம்கள் நிறைந்து வாழும் பழைய ஹைதராபாத்தின் வளர்ச்சித் திட்டங்களுக் காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தார். காங்கிரஸ் பெரும் புள்ளிகளால் எப்போதும் கருவேப்பிலையாக மட்டுமே கருதப்பட்டு வந்த (ஹைதராபாத் முஸ்லிம் களிடையே செல்வாக்கு பெற்றிருந்த) அகில இந்திய மஜ்லிúஸ இத்திஹாத்துல் முஸ்லிமீன் அமைப்பினரிடையே சிறந்த முறையில் நட்பு பாராட்டினார் முதல்வர் ராஜசேகர ரெட்டி. முதல்வரும் ஏ.ஐ.எம். எம்.முடன் இணைந்து சிறுபான்மை வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவதில் அயராது பாடுபட்டார்.
ஆந்திராவில் (தமிழ்நாட்டை விட) மிக சிறுபான்மையினராக உள்ள கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவரான டாக்டர் ஒய்.எஸ்.ஆர். அனைத்துப் பிரிவு மக்க ளின் பேரன்புக்கு உரியவராக திகழ்நதார்.சமூக நல்லிணக்கம் நாளும் வாழ வேண் டும் என விரும்பும் ஒவ்வொரு வரும் நெகிழ்ச்சியோடு போற்றும் சரித்திரமானார் டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி.

Share this