வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்துவோம்சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு
நிர்வாகி
0
வெளிநாட்டு தொழிலாளர்களின் வருகையை கட்டுப்படுத்துவோம்சிங்கப்பூர் பிரதமர் அறிவிப்பு
சிங்கப்பூர், செப்.17-
வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்கள் வேலை தேடி சிங்கப்பூர் வருவதை கட்டுப்படுத்துவோம் என்று சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் தெரிவித்தார். அவர் நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
உலகப்பொருளாதார பின்னடைவு சிங்கப்பூர் பொருளாதாரத்தையும் பாதித்துள்ளது. சிங்கப்பூரின் வருடாந்திர பொருளாதார வளர்ச்சி கடந்த ஆண்டு 1.1 சதவீதமாக உள்ளது. 2004-ம் ஆண்டு இது 8.2 சதவீதமாக இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் வேலை இல்லா திண்டாட்டம் மிக அதிக அளவுக்கு உயர்ந்து விட்டது. இந்த நிலையில் ஆண்டுதோறும் வேலை தேடி ஒரு லட்சம் பேர் சிங்கப்பூர் வருகிறார்கள். இப்போது சிங்கப்பூரில் மொத்தம் 10 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மொத்தம் உள்ள மக்கள் தொகையான 48 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 35 சதவீதம் பேர் தற்காலிகமாக சிங்கப்பூரில் வசிப்பவர்களும், சிங்கப்பூரை சேராத ஆனால் இந்த நாட்டில் நிரந்தரமாக குடியேறி இருப்பவர்களும் ஆவார்கள்.
இவ்வாறு அந்த நாட்டு பிரதமர் லீ சின் கூறினார்.