வருந்தம் தெரிவித்த யுஏஇ-விமானத்தை விடுவித்த இந்தியா
நிர்வாகி
0
கொல்கத்தா: யுஏஇ விமானம் ஆயுதங்களுடன் கொல்கத்தாவில் தரையிறங்கிய விவகாரத்தில் அந்நாடு வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து இன்று காலை அந்த விமானம் விடுவிக்கப்பட்டது.
யுஏஇ விமான படைக்கு சொந்தமான ஹெர்குல்ஸ் சி 130 என்ற விமானம் சீனாவின் ஜியான்யாஹ் நகருக்கு செல்லும் வழியில் கொல்கத்தாவில் எரிபொருள் நிரப்ப தரையிறங்கியது.
அந்த விமானத்தை சோதனையிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அப்போது அதில் ஆயுதங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும், அந்த விமானி ஆயுதம் இருக்கும் தகவலை தெரிவிக்காததால் அந்த விமானம் சிறைபிடிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக கொல்கத்தாவில் நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்ட யுஏஇ அதிகாரிகள், தொழில்நுட்ப தவறு காரணமாக அந்த விமானி ஆயுதங்கள் இருப்பதை தெரிவிக்க தவறிவிட்டார். இதற்காக நாங்கள் வருந்துகிறோம் என வருத்தம் தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து விமானத்தை விடுவிக்குமாறு வெளியுறவு துறை அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் சுங்கத்துறைக்கு உத்தரவிட்டது.மேலும், இந்தியா, யுஏஇ நாடுகளுக்கு இடையில் இருக்கும் நட்புறவு மற்றும் நெருக்கம் காரணமாக இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளியுறவு துறை கூறியுள்ளது.
இதையடுத்து இந்த விமானம் இன்று காலை சுமார் 9.30 மணிக்கு சீனா நோக்கி பறந்தது.