Breaking News

உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினராக சேர தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் சீத்தாராமன் தகவல்

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ
0
உலமாக்கள் மற்றும் பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர தகுதி உடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் சீத்தாரமன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

2009, 10ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நல வாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்காணும் நிதி உதவிகள் யாவும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.

வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.

எனவே கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷர்கானாக்கள் மற்றும் முஸ்லீம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்கள் உரிய படிவத்தில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி நெ.512, காந்திரோடு, என்ற முகவரியில் அமைந்துள்ள வக்பு வாரிய கண்காணிப்பாளரிடம் விண்ணப்பித்து உறுப்பினர்களாக சேர்ந்து, அரசு உதவிகளை பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags: உலமாக்கள் மற்றும் பணியாளர் நலவாரியம் உறுப்பினர் கலெக்டர் தகவல் தகுதி

Share this