Breaking News

த.மு.மு.க.வின் டெல்லி பேரணியின் வெற்றி அகில இந்திய அளவில் முஸ்லிகளுக்கு 10 சதவீத இடஓதுக்கீடு ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில்

நிர்வாகி
0
அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஓதுக்கீடு வழங்கும் பரிந்துரையை வழங்கிய ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் உரிமைப் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது. (அல்ஹம்துலில்லாஹ்)




அகில இந்திய அளவில் சமுதாய இயக்கங்கள் எண்ணற்றவை இருப்பினும் முஸ்லிம்களின் ஜீவாதார கோரிக்கைகளுக்காக தொடர்ந்து களம் கண்டு சோர்வின்றி, ஓய்வின்றி, கருமமே கண்ணாக பாடுபட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சாதனை வரலாற்றில் மற்றொரு திருப்புமுனையாக இந்த வெற்றி கிடைத்துள்ளது.

2007ஆம் ஆண்டு மார்ச் 7லில் இந்தியக் தலைநகர் டெல்லியே குலுங்கும்வண்ணம் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடைபெற்றது. தலைநகர் டெல்லியில் நாடாளுமன்ற வீதியை நோக்கி பல்லாயிரக்கணக்கான கழகக் கண்மணிகள் பேரணி புறப்பட்டனர்.
பேரணியில் அகில இந்திய அளவில் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் ஒன்றிணைந்து நடந்தே வந்தனர். பேரணி நிறைவிலும் பின்னர் சமூகநீதி மாநாட்டிலும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்கள் மட்டுமல்லாது பிற கட்சி தலைவர்களும் அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு வழங்கும் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து த.மு.மு.கலிவின் போர்க்குரலுக்கு வலிமை சேர்த்தனர்.
மார்ச் 7 பேரணிக்கு பிறகு அகில இந்திய அளவில் முஸ்லிம் இயக்கங்களிடையே ஒரு உத்வேகம் தோன்றியது. இடஓதுக்கீடு குறித்த விழிப்புணர்வு தமிழகத்துக்கு வெளியிலும் பரவியது.

மார்ச் 7 பேரணிக்குப் பிறகும் தொடர்ந்து த.மு.மு.க. அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான இடஓதுக்கீடு குறித்த போராட்டங்களை நடத்தியது.



த.மு.மு.க. அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியும் ரங்கநாத மிஸ்ரா ஆணைய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு முன்னோடியாக நாடாளுமன்றத்தில் அதனை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி போராட்டங்களை நடத்தியது.
இவ்வாறு பல்வேறு போராட்டங்களைக் கண்டபின் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

லிபரான் ஆணைய அறிக்கைகள் வெளிவந்த பின் அது தொடர்பான விவாதங்களுக்கிடையே ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகள் நாடாளுமன்றத்தில் இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை ஏன் என உறுப்பினர்கள் கொந்தளித்தனர்.

குறிப்பாக சமாஜ்வாதிக் கட்சித்தலைவர் முலாயம் சிங்யாதவும், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளக்கட்சியின் உறுப்பினர் அலி அன்வர் உள்ளிட்டோர் தொடர் கேள்விகளை எழுப்பினர்.

லிபரான் ஆணையம் எழுப்பிய புயல் அடங்குவதற்குள் மக்களின் மற்றொரு கோப அலை எழும்பிவிடக்கூடாதே என பதறியது மத்திய அரசு.



இதனைத் தொடர்ந்து ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கை இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும் என பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்தார்.

2009 ஆம் ஆண்டு டிசம்பர் 18 வெள்ளிக்கிழமை இந்தியாவில் வாழும் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் வாய்ந்த நாளாக மாறிவிட்டது.


உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைக்கப்பட்ட சமயம் மற்றும் மொழிவாரி சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் தனது பரிந்துரையில் முஸ்லிம்கள் மற்றும் பவுத்தர்களின் கல்விநிலை குறித்து முஸ்லிம்கள் மற்றும் பவுத்தர்கள் கல்வி நிலையில் மிகவும் பின்தங்கியிருப்பதாகவும் குறிப்பாக தலித் மற்றும்ள பழங்குடியினருக்கு அடுத்த நிலையில் அவர்களின் கல்விநிலை இருப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.


இரண்டு பாகங்களைக் கொண்ட மிஸ்ரா ஆணையம் 449 பக்கங்களைக் கொண்டது. கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், பார்ஸிகள் முஸ்லிம்களை விட கல்வித் தரத்தில் சிறந்த நிலையில் இருப்பதாக குறிப்பிடும் மிஸ்ரா அறிக்கை சிறுபான்மையினரின் சமூக பொருளாதார பின்னடைவுக்கு அவர்கள் கல்வியில் பின் தங்கியிருப்பதை முக்கிய காராணமாக குறிப்பிட்டது.


சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் அரசு வேலை வாய்ப்புகளில் மிகவும் குறைந்த பிரதிநிதித்துவம் வகிக்கின்றனர். சில துறைகளில் முஸ்லிம்களுக்கு அறவே வேலை வாய்ப்பில்லாத நிலை நிலவுகிறது.


சிறுபான்மையினருக்கு மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


சிறுபான்மை சமூகங்களில், பெரும்பான்மை சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர்.

இந்தியாவின் மொத்த சிறுபான்மை மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 73 சதவீதம் பேர் உள்ளனர். அதனை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்புகளில் 10 சதவீதமும் ஏனைய சிறுபான்மை சமூகத்தினருக்கு ஐந்து சதவீதமும் மத்திய அரசுப்பணிகளில் இடஓதுக்கீடு வழங்க ரங்கநாத் மிஸ்ரா ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகள் மீட்கப்பட்டு உரிமைகள் காக்கப்பட பாடுபட்டோர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

Share this