Breaking News

வெற்றி முரசு கொட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன்

நிர்வாகி
0
வெற்றி முரசு கொட்டுங்களேன்-வீறு நடை போடுங்களேன்

(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)

என் இனிய முஸ்லிம் பட்டதாரிகளே! உங்களால் நாட்டின் உயர் பதவியினை எட்டமுடியாதா? உயர் பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் தமிழ் நாட்டில் முஸ்லிம்களின் பிரதிநித்துவம் மிகவும் குறைவாக இருக்கின்றது என்பதினை புள்ளி விபரம் பார்த்தால் அறிந்து கொள்ளலாம். 325 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 10 பேர்கள் தான் உள்ளனர். அதேபோல் 236 ஐ.பி.எஸ் பதவிகளில் வெறும் ஏழு பேர்கள் தான் உள்ளனர். 30க்கும் மேற்பட்ட முஸ்;லிம் கல்லூரிகள(;கலை மற்;றும் இன்ஜினீரயங்) தமிழ் நாட்டில் இருந்தாலும் முஸ்லிம் பட்டதாரி இளைஞர்கள் ஏன் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்ஸில் பிரதிநித்துவம் பெற முடியவில்லை? நம்முடைய இளைஞர்களிடம் திறமையில்லையா? இருக்கிறது. ஆனால் சரியான வழிகாட்டல் இல்லாததால் திக்குத் தெரியாக் காட்டில் விடப்பட்டவர்கள் போல குறைந்த சம்பளத்தில் இந்தியாவிலோ அல்லது வளைகுடா நாடுகளிலோ வேலைக்குச் செல்கின்றனர். நமது முஸ்லிம் பெரியோர்கள், செல்வந்தர்கள் முஸ்லிம் இளைஞர்கள் பட்டம் பெற்றால் போதும் என்று கல்லூரிகள் ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால் அவர்களின் வேலை வாய்ப்பிற்கு என்ன வழிகள் என ஆராய தவறி விடுகின்றனர். வேலை தேடிக்கொள்வது அவரவர் கடமை என எண்ணுகின்றனர். ஆகவே தான் நாட்டில் பட்டம் பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் 15 சதவீதம் வேலை வாய்ப்பில்லாமல் இருக்கின்றார்கள் என்று என.எஸ்.எஸ்.ஓ ஆய்வு சொல்கிறது.

பாரத பிரதமர் நீதிபதி சச்சார் கமிட்டி பரிந்துரைக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்று சொல்கிறார். அந்த சச்சார் கமிட்டியில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் ஓ.பி.சி என்ற மற்ற பிற்பட்ட சமூகத்தில் உள்ள 27 சதவீத இட ஒதுக்கீடில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் ஏனென்றால் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பில் தலித்தினை விட பின்தங்கியுள்ளார்கள் என்று சொல்லியுள்ளது. தலித் பட்டதாரி இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு இருப்பதால் இன்று ஐ.ஏ.எஸ, ஐ.பி.எஸ்ஸில் அதிக இடங்கள் பிடித்து சமூதாயத்தில் தங்கெளுக்கென்று மதிப்பான இடத்தினை பிடித்துள்ளார்கள். சமீபத்தில் நீதிபதி ரங்கனாத் மிஸரா அறிக்கையில் கூட முஸ்;லிம்களுக்கு 10 சதவீதம் வேலை வாய்ப்பினை கொடுக்க சிபாரிசு செய்துள்ளது. ஆகவே படித்த முஸ்லிம் இளைஞர்கள் தங்களை நாட்டின் உயர்பதவிக்கு தயார் செய்யவேண்டும். எப்போதுமே நமது குறிக்கோள் உயர் உடையதாக இருக்க வேண்டும். சென்ற ஜனவரி 26 ந்தேதி உள்துறை அமைச்சகத்தின் தகவல்படி ஐ.பி.எஸ்ஸில் நிறைய இடங்கள் காலியாக இருப்பதால் வருடத்திற்கு 70 பதவிகள் வீதம் 10 வருடத்திற்கு ஐ.பி.எஸ் அதிகாரிகள் தேர்தெடுக்கப் போவதாக அறிவித்திருப்பது நமக்கு ஒரு வாய்ப்பாகக் கருதவேண்டும்.

நாங்களெல்லாம் கல்லூரியில் படித்தபோது அரசு சார்பில் ஐ.ஏ.எஸ் கோச்சிங் மையங்களில்லை. வயது வரம்பும் 24 ஆக இருந்தது. நான் சென்னை புதுக்கல்லூரியில் பட்டப் படிப்பு படித்தபோது ராயப்பேட்டை ஸ்வாக்கத் ஹோட்டல் அருகில் இருந்த ஐயர் ஐ.ஏ.எஸ் அகாடாமியில் சென்று விசாரித்தபோது எம்.ஏ படித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார். ஆனால் எம்.ஏ படித்து விட்டு சென்ற போது வயது உச்சவரம்பை தாண்டி விட்டது. ஆகவே தமிழ்நாடு அரசு நடத்திய தேர்வில் டி.எஸ்.பியாகி பின்பு ஐ.பி.எஸ் அடைய முடிந்தது. ஆனால் இன்று வயது உச்ச வரம்பு ஆகஸ்ட் முதல் தேதியன்று 21 வயதைக் கடந்து 30 வயதிற்கு மேல் தாண்டாது இருந்தால் போதும். வெறும் பட்டம் பெற்றிருந்தாலே ஐ.ஏ.எஸ்ஸ_க்கு உங்களுக்கு தகுதியுண்டு. ஆனால் பரீட்சைக்கான பாடங்கள் முதுகலை பட்டப்படிப்பளவிற்கு இருக்கும். அதற்காக நீங்கள் பயப்பட வேண்டாம். உங்களை நீங்கள் பயிற்சி ழூலம் தயார் படுத்திக் கொள்ளலாம். அந்த பயிற்சியினை அரசே அண்னாநகரிலும், மனிதநேய மையம் சைதாப்பேட்டையிலும், தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பில் சென்னை வெப்பேரியிலும், சென்னை வண்டலூரிலுள்ள பி.எஸ்ஏ இன்ஜினீரியங் கல்லூரியிலும், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியிலும் நடத்தப்படுகிறது. இன்னும் நமது இஸ்லாமிய அமைப்புகள் அதிகமாக பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும.; அப்படி அமைத்தால் டெல்லி சென்று தான் பயிற்சி எடுக்க வேண்டுமென்ற நிலை இருக்காது.

ஐ.ஏ.எஸ்-ஐ.பீ.எஸ் தேர்வு ழூன்று விதமாக யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால் நடத்தப்படும். அவை:

1) முதல்நிலைத் தேர்வு: அதற்கான அழைப்பு ஒவ்வொரு வருடமும் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் அனைத்து லீடிங் ஆங்கில-தமிழ் பத்திரிக்கைகளில் வெளியாகும.;. பரீட்சை இரண்டு தாள்கள் இருக்கும்.

முதல் தாள்: பொதுப் பாடங்கள் சம்பந்தப் பட்டது. அதற்கான மதிப்பெண் 150 ஆகும்.

இரண்டாவது தாள் விருப்பப்பாடங்கள் அடங்கும். அதற்கு 300 மதிப்பெண் தரப்படும். பெரும்பாலும் விருப்பப்பாடங்கள் எடுக்கும் போது அது பிரதான பரீட்சைக்கு உதவும் வகையில் எடுக்க வேண்டும். விருப்பப்பாட பட்டியல்கள் கீழ் வருமாறு:

விவசாயம்
அனிமல் ஹஸ்பன்ட்ரி மட்டும் வெட்னெரரி சயின்ஸ்
தாவரவியல்
வேதியல்
சிவில் இன்ஜினீரியங்
காமர்ஸ்
பொருளாதாரம்
எலக்ட்ரிகல் இன்ஜினீரியங்
புவியியல்
ஜியாலஜி
இந்திய வரலாறு
சட்டம்
கணிதம்
மெக்கானிகல் இன்ஜினீரியங்
மருத்துவம்
தத்துவம்
பௌதீகம்
பொது நிர்வாகம்
சோசியாலஜி
புள்ளிவிரபங்கள்
வுpலங்கியல்
மேற்கூறியவைகளில் பொது நிர்வாகம், வரலாறு, புவியியல் ஏதாவது ஒன்றினை தேர்வு செய்தால் பிரதான பரீட்சைக்கு உதவும்.

ஆரம்ப கட்ட பரீட்சையில் தேர்வு பெற்ற மாணவர்கள் பிரதான பரீட்சைக்கு அழைக்கப் படுவார்கள். அந்தப் பரீட்சைகள் அக்டோபர் மாதம் அல்லது நவம்பர் மாதம் நடக்கும். அதில் ஒன்பது தாள்கள் இருபது நாட்களுக்குள் இருக்கும். அவை பின் வருமாறு:

(கட்டாயம); முதல்தாள்: அங்கீகரிக்கப்பட்ட 18 மொழிகள் ஒன்றில் ஒரு மொழி தேர்வு செய்ய வேண்டும். அதற்கு 300 மதிப்பெண்கள்
(கட்டாயம்) இரண்டாவது தாள்: ஆங்கிலம். அதன் மதிப்பெண் 300
மூன்றாவது தாள்: கட்டுரை. அதன் மதிப்பெண் 200
நானகாவது தாள் மற்றும் ஐந்தாவது தாள்: பொதுப்பாடங்கள். அவைகளுக்கு மதிப்பெண் ஒவ்பொன்றிற்கும் 300
ஆறாவது, ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது தாள்கள்: விருப்பப்பாடங்கள் இரண்டில் ஒவ்வொன்றிற்கும் இரண்டு தாள்கள் இருக்கும். அவைகளுக்கு தலா 300 மதிப்பெண்கள்.
பிரதான பரீட்சையின் நோக்கமே மாணவர்களின் கல்வித் தகுதியை அறிவதிற்காக நடத்தப் படுவது மட்டுமல்ல. மாறாக அவர் பரீட்சையில் தான் படித்த பாடங்களை எவ்வாறு கோர்வையாக எழுதுகிறார் என்பதினையும் ஆய்வு செய்யப்படும். கட்டாயப் பாடத்தில் 35 சதவீத மதிப்பெண்கள் கண்டிப்பாக வாங்க வேண்டும். கட்டாயப் பாடங்களில் கட்டுரை, மொழி பெயர்ப்பு, சுருக்கி எழுதல், வாக்கியம் அமைத்தல், மொழி மரபுச் சொற்தொடர்கள், பழமொழிகள், பொருள் அர்த்தங்கள் ஆகியவை குறிக்கும். பரீட்சைக்கு ஆயத்தமாவதிற்கு எழுதிப் பழகுவது அவசியம்.

அடுத்த படியாக கட்டுரைத் தேர்வில் சரியான தலைப்பினை எடுத்து உண்மையான-தெளிவான கருத்துக்களுடன் எழுத வேண்டும்.. முதல் 5 நிமிடங்களில் கொடுக்கப்பட்ட தலைப்புகளில் இரண்டு தலைப்பினை தேர்ந்தெடுத்து அதில் நன்றாக தெரிந்த ஒரு தலைப்பினை நிலை நிறுத்தி எழுதத் துவங்கவேண்டும். ஆரம்பம்-கரு-முடிவுரை என்று பிரித்துக் கொள்ளவது நல்;லது. எழுதிய கட்டுரையினை திரும்பப் படிக்க நேரத்தினை வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுப் பாடங்கள் இரண்டில் பாடம் ஒன்றில் இந்திய வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய அரசியலமைப்பு, நடப்பு சம்பவங்கள், சமூக செய்திகள் சம்பந்தப்பட்டது. இரண்டாவது பாடம் இந்தியா மற்றும் உலகம் சம்பந்தப்பட்டது, இந்திய பொருளாதாரம், சர்வதேச சம்பந்தமான செயல்கள், விஞ்ஞானம் மற்றும் தொழிழ் நுட்ப வளர்ச்சி, தொலைத் தொடர்பு, புள்ளி விபர ஆய்வு ஆகியவைகள் அடங்கும்.
பிரதான பரீட்சையில் தேர்வு பெற்றவர்கள் நேர்முக தேர்விற்கு டெல்லிக்கு அழைக்கப்படுவார்கள்.

பரீட்சைக்கு ஆயத்தமாகும் முன்பு அது சம்பந்தமான புத்தகங்கள், பீரியாடிகல்ஸ் ஆகியவைகளை தேடி சேகரிக்க வேண்டும். அல்லது அவை கிடைக்கும் நூலகங்கள்-பழைய புத்தகக் கடைகள் ஆகியவைகளை அணுகி புத்தகங்களை சேகரித்து குறிப்பு எடுக்க வேண்டும.;. பொது அறிவிற்கான புத்தகங்களான காம்படிசன் மாஸ்டர், காம்படிசன் ரிவ்யூ, காம்படிசன் சக்சஸ், கேரியர் டைஜஸ்ட் வாராந்திர, மாத ஆங்கில இதழ்களை வாங்கி படிக்க வேண்டும். ஆங்கில தினப் பத்திரிக்கையான ஹிந்து படித்தால் பொது அறிவிற்கான தகவல்கள், கட்டுரைக்கான தகவல்கள் கிடைக்கும். ஆங்கில செய்திகளை ரேடியோ-டி.வியில் கேட்க வேண்டும.; .மலயாள மனோரமா ஆண்டு புத்தகம் பொதுக் தகவல்களை வழங்குகிறது. சென்னையில் கன்னிமாரா-அண்ணாசாலையிலுள்ள பாவாணர் நூலகம்-மாவட்டங்களில் உள்ள நூலகங்கள் ஆகியவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

நேர் முகத் தேர்விற்கு செல்லும் போது தூய ஆடைகளை அணிய வேண்டும். ஒரு முறை வி.ஜி.பன்னீர்தாஸ் தான் சாதாரண கூலித் தொழிலாளியாக சென்னை வந்து இன்று பெரிய கோடீஸ்வரராகி பிரபலமானதிற்குக் காரணம் அவர் எப்போதும் மற்றவர்கள் கவரக்கூடிய ஆடை, அதாவது கோட்-சூட் அணிவதை விடுவதில்லையாம். ஆகவே தான் பலங்காலத்தில் ஆடைபாதி ஆள்பாதி என்பார்கள். தேர்வுக்குழுவினர் கேட்கும் கேள்விக்கு நேரான தெரிந்த பதிலைச அவர்களைப் பார்த்துச் சொல்ல வேண்டும். தெரியவில்லையென்றால் அதனை ஒப்புக் கொள்ள வேண்டும். பதட்டப்படாமல் நீங்கள் படித்தவர்கள்-மிக உயர்ந்த வேலைக்குப் தேர்வு செய்யப்பட போகிறீர்கள் என்று எண்ண வேண்டும். எந்த சமயத்திலும் உங்கள் பணத்திலோ படிப்பிலோ சமூக அந்தஸ்திலோ தாழ்வு மனப்பான்மையினை உங்களை ஆட்கொள்ளக்கூடாது. தைரியம் புருஷ லட்சணம் என்பார்கள். ஆகவே எந்த நேரத்திலும் தைரியத்தினை கை விடக்கூடாது.

உலக பொருளாதார வீழ்ச்சி காரணமாகவும், அமெரிக்கா, இந்தியாவில் அவுட் சோர்ஸிங்கினை கட்டுப்பாடு விதித்து இந்திய இன்ஜினீரியங் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பு இழக்கும் பயம் இருப்பதாலும், நமது முஸ்லிம்கள் பல் வேறு முஸ்லிம்கள் நடத்தும் இன்ஜினீரியங் கல்லூரிகள், மற்றும் பல்வேறு இன்ஜினீரியங் கல்லூரிகளில் முஸ்லிம்கள் படித்து வருவதாலம் அவர்கள் மிக குறைந்த சம்பளத்தில் இந்தியக் கம்பெனிகளில், அல்லது வளைகுடா நாடுகளில் வேலை தேடுவதினை விட, சம்பளம் அதிகமுள்ள, சமூகத்தில் மரியாதையுள்ள, வேலை உத்திரவாதமுள்ள, சலுகைகள், ஓய்வூதியம் ஆகிய உத்திரவாதத்துடன் கூடிய உயர் பதவியான ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் பரீட்சை எழுதி அந்தப் பதவிகளை அடையும் குறிக்கோளே மேல்.

தமிழ் நாட்டில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பில் மூன்றரை சதவீதம் ஒதுக்கீடு அளித்துள்ளார்கள். மத்தியில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தேர்வில்;; தேர்வு பெறாதவர்கள் மனந்தளராது அதற்கு இணையாக தமிழகத்தில் டிப்டி கலெக்டர்-டி.எஸ.பி நேரடி தேர்விற்கான தமிழ்நாடு தேர்வாணையும் நடத்தும் குரூப் ஒன்று பரீட்சை எழுதி தேர்வு பெறலாம்.

மனிதன் ஒரு லட்சியத்தினை அடைய வேண்டுமென்றால் முதலில் அது சாத்தியமாகும் என்ற தன்னம்பிக்கை கொள்ள வேண்டும். அந்த லட்சியத்திற்கு எப்படி பிறந்த குழந்தைக்கு அது வளர சத்துணவு கொடுக்கிறோமோ அதேபோன்று கடின உழைப்பு மூலம் உங்கள் லட்சியத்தினை அடைய முயல வேண்டும். ஒரு முறை தேர்வில் தோல்வியடைந்தால் மனந்தளரக்கூடாது. நான் மூன்று முறை எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றாலும் நேர்முகத் தேர்வில் வெற்றி மூன்றாவுது முறையாகத்தான் தேர்வு பெற்றேன். மூன்றாவது படிக்கட்டில் ஏறிய குழந்தை தோல்வியடைந்தலும், இரண்டாவது படிக்கட்டில் விழுவதில்லை. நான்காவது படிக்கட்டில் ஏற முடியாது அவ்வளவு தானே. மீண்டும் மூன்றாவது படிக்கட்டிலிருந்து குழந்தை நான்காவது படிக்கட்டுக்குப் போக கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்-பயிற்சியும் வேண்டும். அதேபோன்று தான் பரீட்சையில் ஒரு முறை தோல்வி ஏற்பட்டால் கஜினி முகம்மது போரில் வெற்றிபெற எத்தனை தடவை முயற்சி எடுத்தான் என்று எண்ணத்தில் கொண்டு அத்தனை தடவை முயற்சி எடுத்தாலும் தான் கொண்ட குறிக்கோளை அடைய பாடுபட வேண்டும். ஆகவே தான் வெற்றி முரசான விடா முயற்சிகளை எடுங்கள,; வெற்றிவாகை சூடி சமூதாயத்தில் வீறு நடை போடுங்கள் என்ற கோசங்கள் எழுப்பினேன் அது சரிதானே என் இனிய இஸ்லாமிய பட்டதாரிகளே!

Tags: கட்டுரை

Share this