Breaking News

போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........

முகவைத்தமிழன்
0

அஸ்ஸலாமு அலைக்கும்,


போக மாட்டார்கள் புதியவர்களிடம் ........


அன்னை இருக்கிறாள் , தந்தை இருக்கிறார் ,
மனைவி இருக்கிறாள் - நானும் இருக்கிறேன்
வெகு தொலைவில்!



அள்ளி முத்தமிடவேண்டிய என் பிஞ்சு குழந்தையை
தொட்டு தடவி பார்த்தேன்
புகைப்படத்தில்!



மழலையின் குரலை கைபேசியில் கேட்டு
கதறி அழுதது என் மனம் கண்களின் வழியாக
சத்தமே இல்லாமல்!



எதிர் திசையில் இருந்து ஒரு குரல்,
அட குழந்தையின் குரலை கேட்டு சந்தோசத்தை பாரு!



எல்லோரிடமும் பேசினேன்-எல்லோருக்கும்
என் குழந்தையை பற்றியே பேச்சு ,
சந்தோசத்தில்!



கடைசி சுற்றாக வந்தது என் மனைவியிடம்
அவள் மட்டும் கேட்டாள் " எப்போ வருவிங்க"!!



என் குரல்வளையில் யாரோ நெரிப்பது போல!
என் குரலை என்னாலே கேட்க முடியவில்லை!



கனைத்து விட்டு பின்பு சொன்னேன்
உங்களுக்காகத்தானே ! - போய்விடலாமா
என தோன்றியது உள்ளத்தில்!
கடைசியாக ஒரு வருடம் என ஆறுதல் சொன்னது என் மனம்!!!



கடைசியாக முடிவு எடுத்தே விட்டேன் நான்,
நாட்டிற்கு செல்ல!
இனியும் தாமதிக்க முடியாது - காரணம்
கம்பெனியில் முடிந்து விட்டது என் வயது வரம்பு!



ஊருக்கு சென்றேன் நான் ,
மூட்டை முடிச்சுடன் - கூடவே
மூட்டு வழியும் முதுகு வலியும்!!!



என் இளமையெல்லாம் பாலைவனத்தில் விட்டு விட்டு
வீடு திரும்பினேன்
விழி பிதிங்கினேன் களவு கொடுத்த கணவனாய்!!!



புகைப்படத்திலே பார்த்து பார்த்து பழகிய
என் பிள்ளைகள் , இப்போதும் பார்கிறார்கள்
அப்படியே !
தூரத்தில் வைத்து.......



கண்களில் பிரகாசத்தோடு
கைகளை நீட்டி அழைத்தேன் அவர்களை,
உள்லிருந்து என் மனைவியின் குரல்
போகமாட்டார்கள் புது ஆளிடம்....
???????




-யாசர் அராபத்.


Tags: கவிதை வலைகுடா

Share this