கட்டாய திருமணப் பதிவு சட்டம்: அனைத்து சமூக அமைப்புகள் கலந்தாய்வு
நிர்வாகி
0
உச்சநீதிமன்றத்தின் அறிவுரையின் படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் கட்டாய திருமண பதிவு சட்டத்தை நிறைவேற்ற வேண் டும் என மத்திய அரசு உத்திர விட்டுள்ளது. அதன்படி தமிழக அரசும் இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த தேவையான முயற்சிகளை மேற்க்கொண்டுள்ளது.
இச்சட்டம் நடைமுறைப்படுத்தப் பட்டால் முஸ்லிம் ஷரீத் சட்டத்தில் இடையூறு ஏற்படும் என முஸ்லிம் மக்களிடையே எழுந்துள்ள ஐயப் பாடுகளைப்பற்றி விரிவாக கலந்தா லோசிக்க ஜமாஅத்துல் உலமா சபை தலைமையில் கடந்த 17.02.2010 அன்று சென்னை பிரெஸிடென்ஸி ஹோட்டலில் முஸ்லிம் சமுதாய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தமிழக அரசு இயற்றி உள்ள சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இச்சட்டம் அமைய வேண்டும் என கோரிக்கை மனு தயார் செய்து, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது எனவும் மேலும் இச்சட்டம் குறித்து ஆராய நிபுணர் குழு அமைக்கவும் தீர்மாணிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் ஜமாஅத்துல் உலமா தலைவர் மௌலான அப்துல் ரஹ்மான், த.மு.மு.க தலைவர் பேரா.எம்.ஹச்.ஜவாஹிருல்லாஹ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் முகைதீன், தேசிய லீக் தலைவர் பஷீர் அஹமத், வேலூர் தொகுதி எம்.பி. அப்துல் ரஹ்மான், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அபூபக்கர், தமிழக தலைமை காஜி சாலவுதீன் அய்யூப் மற்றும் ஜமாஅத்தே இஸலாமிய ஹிந்த், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம், தமிழ் மாநில தேசிய லீக், தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் முதலிய அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Tags: கலந்தாய்வு திருமணப்பதிவுசட்டம்