Breaking News

இலங்கை வெலிகமையில் மீலாதுந் நபி பெருவிழா

நிர்வாகி
0
வெலிகமையில் மீலாதுந் நபி பெருவிழா:
தலைவர் பேராசிரியர், தளபதி ஷபீகுர்ரஹ்மான் இலங்கைப் பயணம்

சென்னை, பிப்.26-
இலங்கை வெலிகமையில் அத்தரீக்கத்துல் ஹக்கியத் துல் காதிரிய்யா சார்பில் மீலாதுந்நபி பெருவிழா மாநாடு நடைபெற உள்ளது. பிப்ரவரி 27-ம் தேதி மாலையும் 28-ம் தேதி காலை 9 மணியிலிருந்து மாலை 8 மணி வரையும் நடைபெற உள்ள விழாவில் சங்கைக்குரிய உலமாக்களும், அறிஞர் பெருமக்களும் உரையாற்ற உள்ளனர்.
இந் நிகழ்ச்சியில் குத்புல் ஃபரீத், ஜமாலிய்யா அஸ்ஸய்யித் யாஸீன் அல்ஹஸனிய்யுல் ஹாஷிமிய் (ரலி) அவர்களின் அறபு - தமிழ் அகராதி நூல் வெளியிடப்படு கிறது.
தமிழகத்திலிருந்து இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில மார்க்க அணிச் செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், காயல்பட்டினம் மவ்லவி எச்.ஏ. அஹமது அப்துல் காதிர் ஆலிம், சென்னை மவ்லவி ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, திருச்சி மவ்லவி இப்ராஹீம் ரப்பானி, மவ்லவி ஹுசைன் முஹம்மது மன்பஈ ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.
அறபு - தமிழ் அகராதி நூலை தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் வெளியிட்டு சிறப்புரையாற்று கிறார்.
மார்ச் 1-ம் தேதி இலங்கை தலைநகர் கொழும்புவில் இலங்கை முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஜ்வர் தலைமையில் தலைவர் பேராசிரியருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், தொடர்ந்து நிருபர் சந்திப்பும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை காயல் ரபீக் உள்ளிட்டவர்கள் செய்து வருகின்றனர்.

Tags: இலங்கை மீலாது நபி

Share this