Breaking News

நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநாடு

நிர்வாகி
0
மகளிர் முன்னேற்றத்திற்கு இஸ்லாம்| மார்க்கம் எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று மகளிர் விழிப்புணர்வு மாநாட்டைத் தொடங்கி வைத்து தலைமை உரை யாற்றிய மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் கூறினார்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் சமுதாய மறுமலர்ச்சி மாநாடாக திருநெல்வேலி மாவட்டம் மேல
 ப்பாளையத்தில் எழுச்சியோடு இன்று தொடங்கியது.

மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மகளிர் விழிப் புணர்வு மாநாடு காலை 10.30 மணிக்கு தொடங் கியது. நிகழ்ச்சிக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தமிழ்நாடு மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர் தலைமை தாங்கினார். ரஹ்மத் அப்துல் ரஹ்மான், ய+சுப் சுலைஹா மீரான் மைதீன், சைபுன்னிசா, ஜமீலா ஆகியோர் முன்னிலை வகித்தன
 ர்.
குடும்ப விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசி ரியை ஏ. ரபீக்கா, மருத்துவ விழிப்புணர்வு என்ற தலைப்பில் டாக்டர் எல். என். ராதா, கல்வி விழிப்புணர்வு என்ற தலைப்பில் பேராசிரியை தஸ்ரீக் ஜஹான் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்ற ஃபாத்திமா முஸப்பர் உரையாற்றும் போது குறிப் பிட்டதாவது-

தாய்ச்சபையாம் முஸ்லிம் லீகின் 62-வது நிறுவன தினம் இன்று சமுதாய மறுமலர்ச்சி மாநா டாக ஏற்பாடு செய்துள்ள தென் மண்டல மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் அனைவருக் கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், நன்றி யையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலப்பாளையம் கண்ணியத்திற்குரிய தலைவர் காயிதெ மில்லத் பிறந்து வளர்ந்து அவர் காலடி பட்ட பகுதியில் இந்த மாநாடு நடைபெறு வதில் பெருமிதம் கொள் கிறோம். இந்தியப் பெண்க ளின் பல்லாண்டு கால கோரிக்கையான 33 சதவீத இடஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டு விவாதம் நடை பெற்று கொண்டிருக்கிற இக்காலகட்டத்தில் முஸ்லிம் லீகின் துவக்க நிகழ்ச்சியாக மகளிர் விழிப்புணர்வு மாநாடாக நடத்திக் கொண்டிருக் கிறோம்.ஹ இதற்கு முழு முதல் காரணமாக இருந்த ஐக்கிய முற்போக்கு கூட் டணியின் தலைவர் சோனியாகாந் திக்கும், இதே கோரிக்கையை மகளிர் சார்பாக வலியுறுத்தி வந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர் களுக்கும் நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறோம்.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு சகலவித மான உரிமைகளையும் வழங்கியுள்ளது. மகளிர் முன்னேற்றத்துக்கு இஸ் லாம் மார்க்கம் எவ்வித மான தடையாகவும் இருந் ததில்லை. கல்வி கற்பதை ஆண் - பெண் அனைவருக் கும் கட்டாய கடமையாக் கியுள்ளது இஸ்லாம் மார்க்கம். அப்படியிருந் தும் இந்திய முஸ்லிம்கள் கல்வியிலும், பொருளா தாரத்திலும், அரசியலிலும் மிகவும் பின்தங்கியுள்ளனர். நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கையும், ரங்கநாத் மிஸ்ரா அறிக்கையும் இந் திய முஸ்லிம்களின் அவல நிலைகளை விரிவாக ஆய்வு செய்து அறிவித் துள்ளன. நாட்டின் பல பாகங்க ளிலும் 80 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் அடிப்படை கல்வி கூட இல்லாமல் உள்ளனர். ஆண்கள் நிலையும் அவ் வாறுதான் உள்ளது. தாழ்த் தப்பட்ட தலித் மக்களை விட மிகவும் பின்தங்கிய நிலையில் முஸ்லிம் சமுதாயம் உள்ளது என் பதை அந்த அறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

இறைத்தூதர் முஹம் மது நபி (ஸல்) அவர்கள் குகையில் பசித்திருந்தும், தனித்திருந்தும், விழித்திருந் தும் இறைவனை துதி செய்த போது முதலில் இறங்கிய திருக்குர்ஆன் வசனம், ஹஓதுவீராக|. உம்மைப்படைத்த இறைவ னின் திருப்பெயரைச் சொல்லி ஹஓதுவீராக|. அவனே உங்களை ஹஅலக்கு| என்னும் நீர்த்துளியி லிருந்து படைத்தான். நீங்கள் அறியாத பல விஷயங்களை அறிவித்துக் கொடுத்தான். எழுது கோலை கொண்டு எழுத கற்பித்தான். இந்த இறை வசனம்தான் முதலில் இறங்கியது.

1400 ஆண்டுகளுக்கு முன்பாக படிக்கவும், எழுத வும் இறைவனால் கட் டளையிடப்பட்ட போதும் முஸ்லிம் பெண்கள் இன்றும் கையெழுத்துப் போடக் கூட தெரியாமல் இருப்பது வெட்கப் படவேண்டியது மட்டு மல்லாமல் வேதனைக்கும் உரியதாகும்.

இந்த நிலைமைகளை உடனடியாக மாற்றியாக வேண்டும். பெண்கள் கல்விக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு சமுதாயமே கல்வி கற்ற தற்கு ஒப்பாகும். ஆண் கல்வி கற்றால் அவனுக்கு மட் டும்தான் பயன்படும். பெண் படித்தால் புதிய உல கத்தையே உருவாக்க முடியும். ஒவ்வொரு குழந்தைக்கும் தாயின் மடிதான் முதல் பள்ளியாக திகழ்கிறது.

கல்வி பயில்வதையும், கற்பிப்பதையும் இஸ்லாம் மார்க்கம் இறை வணக்க மாக்கியுள்ளது. கல்விக்காக பாடுபடுவது தர்ம காரிய மாகும். பெண்கள் கல்வி பெறுவதன் மூலமே பொரு ளாதாரம், மருத்துவம், சமுதாயம் என அனைத்து துறைகளிலும் முன்னேற முடியும். அதற்கான பணியை தொடங்கும்முக மாகவே இந்த மாநாடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பெண்கள் அனைவரும் இந்த சமுதா யத்தின் முன்னேற்றத்திற்கு தங்களுடைய பங்களிப் பைச் செய்ய முன் வர வேண்டும்.

இவ்வாறு ஃபாத்திமா முஸப்பர் பேசினார்.

Tags: மாநாடு முஸ்லிம் லீக்

Share this