Breaking News

மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நிர்வாகி
0
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் 62-வது நிறுவன தினத்தை முன்னிட்டு 2010 மார்ச் 10 புதன்கிழமை மேலப்பாளையம் ஜின்னா திடலில் நடைபெற்ற சமுதாய மறுமலர்ச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு-


முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு
மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மேற்கொண்ட முயற்சியின் பலனாக அமைக்கப்பட்ட நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் கல்வி வேலைவாய்ப்பில் சிறுபான்மை முஸ்லிம் ச
 முதாயத்திற்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையை ஏற்று உடனடியாக அமல்படுத்த மத்திய அரசை இம் மாநாடு வலியுறுத்துகிறது.


திருமண கட்டாயப் பதிவுச் சட்டம்
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அண்மையில் தமிழ்நாட்டில் கொண்டு வரப்பட்ட திருமண கட்டாயப் பதிவு சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தில் தலையிடுவதாக அமைந்து விடுமோ என்ற ஐயப்பாடு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்தது. இச் சட்ட மசோதா முன்வடிவாக கொண்டு வரப்பட்ட உடனேயே அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தை நடத்தி முஸ்லிம்களின் அச்சம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்து மேற் கொண்ட முயற்சியின் விளைவாக முஸ்லிம்களின் ஐயப் பாட்டை நீக்க தமிழக அரசு முன் வந்துள்ளதற்கு இம் மாநாடு நன்றி தெரி வித்துக் கொள்கிறது.

ஆயுள் சிறைவாசிகள் விடுதலை
அறிஞர் அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றினோம். அறிஞர் அண்ணா நூற்றாண்டு துவக்க விழா மற்றும் நிறைவு விழாக்களில் சுமார் 1500 ஆயுள் சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டனர்.

தற்போது கோவை சம்பவங்களில் தண்டிக்கப்பட்ட 18 பேர் உள்ளிட்ட 51 பேர் ஆயுள் சிறைவாசிகளாக உள்ளனர். இதில் கோவை மத்திய சிறையில் மட்டும் 32 பேர் உள்ளனர். கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி 10 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்ய முத்தமிழ் அறிஞர் முதல் அமைச்சர் கலைஞர் தலைமையிலான தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

வெளிநாடு செல்லும் முஸ்லிம் இளைஞர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க வேண்டுதல்
மேலப்பாளையத்தில் முஸ்லிம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி வெளிநாடு செல்ல விரும்பினால் அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதில் காவல் துறை தடையில்லா சான்று தர மறுப்பது உள் ளிட்ட பல்வேறு நெருக் கடிகள் அளிக்கப்படுவதாக நீண்ட காலமாக புகார் சொல்லப்படுகிறது.

உள்நாட்டில் வேலை இல்லாத இந்த இளைஞர்கள் வெளிநாட்டில வேலைவாய்ப்பு பெற அவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்க ஆவன செய்ய மத்திய - மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட துறைகளை இம் மாநாடு வலியு றுத்தி கேட்டுக் கொள்கிறது.

சுயநிதி கல்லூரி ஆசிரியர்களுக்கு அரசு சம்பளம்
தமிழ்நாட்டில் சிறு பான்மையினரால் நடத்தப்படும் ஆரம்ப நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஓரியண்டல் அரபி சுயநிதி கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடந்த 19 ஆண்டு காலமாக அரசு சம்பளம் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு அரசு ஊதியம் வழங்கி உதவ தமிழக அரசை இம்மாநாடு வலியுறுத்துகிறது.

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டுதல்
அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் காலிப்பணியிடங்களை விரைவாக நிரப்பிட தமிழக அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

கடையநல்லூர் வரிவிதிப்பு பிரச்சினை
கடையநல்லூர் நகராட்சியில் முஸ்லிம்கள் நிறைந்த ஐந்து வார்டுகளில் மட்டும் 533 வீடுகளுக்கு 1000 சதவீதத்திகு மேல் வரி விதிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி முதல்வர் கலைஞரின் கவனத்திற்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநிலத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் நேரில் கொண்டு சென்றார். முதல்வரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதனை பரிசீலிக்க உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் ஆகி யோர் தமிழ்நாடு நகராட் சிகளின் நிர்வாக இயக்கு நரை சந்தித்து பேசிய போது, இந்த வரிவிதிப்பு பெரும் அநீதி இது மறுபரிசீலனை செய்யப்படும் என உறுதி தரப்பட்டதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதோடு இந்த வரி குறைப்பை விரைந்து நிறைவேற்றித் தர இம் மாநாடு வலியுறுத்துகிறது.

தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம்
தென் மாவட்ட வளர்ச்சி, தொழில் வளம், மக்கள் பயன்பாடு இவைகளை கருத்தில் கொண்டு தூத்துக்குடி விமான நிலையத்தை விரிவுபடுத்தி அதிக விமானங்கள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

தூத்துக்குடி - திருநெல்வேலி நான்கு வழிச்சாலை
தூத்துக்குடி - திருநெல்வேலி இரு மாநகரங்களின் போக்குவரத்து நெரிசலை குறைக்க தூத்துக்குடி - திருநெல்வேலி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

செங்கோட்டை மார்க்கத்தில் அதிக ரயில்கள்
செங்கோட்டை - சென்னை வழித்தடத்தில் கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேலப்பாளையம் ரயில் நிலைய அபிவிருத்தி
மேலப்பாளையம் ரயில்வே நிலையம் கடந்த 29 வருடங்களாக எந்த அபிவிருத்தி பணிகளும் நடைபெறாமல் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை புதுப்பித்து, ரிஸர்வேஷன் கவுண்டர், சுகாதார வசதிகள் உள்ளிட்ட வைகள் செய்து தருவதோடு ரயில்கள் இங்கு நின்று செல்லவும் உத்தரவிட மத்திய ரயில்வே அமைச்சகத்தை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

பேட்டை நூற்பாலை திறக்க வேண்டுதல்
திருநெல்வேலி பேட்டை தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 10 வருடங்களாக மூடப்பட்டு கிடப்பதால் இங்கு பணிபுரிந்த மூன்றாயிரம் பேர் வேலையின்றி அவர்கள் குடும்பங்கள் சிரமப்படுகின்றன.

இந்த நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டு திறக்கப்பட்டால் 5 ஆயிரம் பேருக்கு மேல் வேலை கிடைக்கும். எனவே, இந்த நூற்பாலையை திறக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசை இம் மாநாடு கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags: மாநாடு முஸ்லிம் லீக்

Share this